மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது நேரில் வழங்கினார்.!! சென்னை.ஜூன்.23., சென்னை அடையாரில் செயல்பட்டு வரும் கேன்சர் இன்ஸ்டியூட்டிற்கு மருத்துவ தேவைக்காக தமிழகம் முழுவதில் இருந்தும் மக்கள் வருகை தருகிறார்கள். கேன்சர் இன்ஸ்டியூடின் அடிப்படை தேவைகளுக்காக மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பாக நன்கொடை வழங்க நேற்று (22.06.2021) மஜக மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது அவர்கள் நேரில் சென்று முதல்கட்டமாக காசோலை மூலமாக நன்கொடையை மருத்துவமனையின் டைரக்டர் சாகர் அவர்களிடம் வழங்கினார். இந்நிகழ்வில் மத்திய சென்னை மாவட்ட செயலாளர் பிஸ்மி, மாவட்ட பொருளாளர் அப்பாஸ், தலைமை செயற்குழு உறுப்பினர் பசீர் அஹமது ஆகியோர் உடனிருந்தனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKITWING #தலைமையகம் 22.06.2021
Tag: மஜக மாநிலப் பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது
தமுமுக மூத்ததலைவர் குனங்குடி ஹனிபா அவர்கள் மருத்துவமனையில் அனுமதி..! மஜக பொருளாளர் எஸ்.எஸ் ஹாரூன் ரசீது நேரில் சந்தித்து நலம் விசாரிப்பு..!!
சென்னை.ஜூன்.22., தமுமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான குனங்குடி ஹனிபா அவர்கள் உடல் நலக்குறைவால் சென்னையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவரை இன்று மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது, துணை பொதுச்செயலாளர் என்.ஏ.தைமிய்யா ஆகியோர் மருத்துவமனையில் நேரில் சந்தித்து நலம் விசாரித்தனர். மேலும் தலைமை செயற்குழு உறுப்பினர் பசீர், மத்திய சென்னை கிழக்கு மாவட்ட பொருளாளர் அமீர் அப்பாஸ், வட சென்னை மேற்கு மாவட்ட பொருளாளர் முஹம்மது அக்பர், மாவட்ட வர்த்தக அணி செயலாளர் அப்துல் ரஷீத், வட சென்னை மேற்கு மாவட்ட 35-வட்ட செயலாளர் தமிமுன் அன்சாரி, 34 வட்ட பொருளாளர் யாஸின், 35 வட்ட துணைச் செயலாளர் நாவஸ் கனி, துறைமுக பகுதி நிர்வாகிகள் அபூபக்கர், அசன் அலி ஆகியோர் உடனிருந்தனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKITWING #தலைமையகம் 22.06.2021
விருதுநகர் மாவட்டசெயற்குழு கூட்டம்..!! மஜக மாநில நிர்வாகிகள் பங்கேற்பு..!!
விருதுநகர்.நவ.18.., மனிதநேய ஜனநாயக கட்சியின் விருதுநகர் மாவட்ட செயற்குழு கூட்டம் 17.11.2019 அன்று சிவகாசியில் விஸ்வகர்மா திருமண மஹாலில் சிவகாசி நகரச் செயலாளர் இக்பால் மைதீன் அவர்களின் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக மஜக மாநிலப் பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது.,M.Com., தலைமை ஒருங்கிணைப்பாளர் மௌலா நாசர், துணைப் பொதுச் செயலாளர் மண்டலம் ஜெயினுலாபுதீன் ஆகியோர் கலந்து கொண்டனர். இச்செயற்குழு கூட்டத்தில் கட்சியின் வளர்ச்சி குறித்தும், வருங்கால செயல் திட்டங்கள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. இனி வரும் காலங்களில் தீவிர உறுப்பினர் சேர்க்கை நடத்தவும் திட்டமிட்டுள்ளது, இறுதியாக விருதுநகர் மாவட்டத்தில் புதிதாக நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். புதிய நிர்வாகிகள் பட்டியல் இன்று அறிவிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இக்கூட்டத்தில் மாவட்ட நிர்வாகிகள், நகர நிர்வாகிகள், ஒன்றிய நிர்வாகிகள், பேரூர் கழக நிர்வாகிகள், மற்றும் உறுப்பினர்களும் கலந்து கொண்டனர். தகவல்; #தகவல்தொழில்நுட்பஅணி #MJK_IT_WING #விருதுநகர்_மாவட்டம் 18.11.2019