விருதுநகர் மாவட்டசெயற்குழு கூட்டம்..!! மஜக மாநில நிர்வாகிகள் பங்கேற்பு..!!

விருதுநகர்.நவ.18.., மனிதநேய ஜனநாயக கட்சியின் விருதுநகர் மாவட்ட செயற்குழு கூட்டம் 17.11.2019 அன்று சிவகாசியில் விஸ்வகர்மா திருமண மஹாலில் சிவகாசி நகரச் செயலாளர் இக்பால் மைதீன் அவர்களின் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.

இதில் சிறப்பு அழைப்பாளராக மஜக மாநிலப் பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது.,M.Com., தலைமை ஒருங்கிணைப்பாளர் மௌலா நாசர், துணைப் பொதுச் செயலாளர் மண்டலம் ஜெயினுலாபுதீன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இச்செயற்குழு கூட்டத்தில் கட்சியின் வளர்ச்சி குறித்தும், வருங்கால செயல் திட்டங்கள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. இனி வரும் காலங்களில் தீவிர உறுப்பினர் சேர்க்கை நடத்தவும் திட்டமிட்டுள்ளது, இறுதியாக விருதுநகர் மாவட்டத்தில் புதிதாக நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள்.

புதிய நிர்வாகிகள் பட்டியல் இன்று அறிவிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இக்கூட்டத்தில் மாவட்ட நிர்வாகிகள், நகர நிர்வாகிகள், ஒன்றிய நிர்வாகிகள், பேரூர் கழக நிர்வாகிகள், மற்றும் உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.

தகவல்;
#தகவல்தொழில்நுட்பஅணி
#MJK_IT_WING
#விருதுநகர்_மாவட்டம்
18.11.2019

Top