கடந்த நான்கு நாட்களாக விட்டு விட்டு மழை பெய்த வரும் நிலையில், நாகை நகராட்சிக்கு உட்பட்ட நாகப்பட்டினம் மற்றும் நாகூரில் மழை நீர் தேங்கிய பகுதிகளில் அவற்றை துரிதமாக வெளியேற்ற தமிமுன் அன்சாரி MLA அவர்களின் உத்தரவின் பேரில் நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது.
19 வது வார்டில் தேங்கி இருக்கும் மழை நீரை நேரில் வந்து பார்வையிட்ட MLA அவர்கள், அவற்றை துரிதமாக 24 மணி நேரத்திற்குள் வெளியேற்றுமாறு அதிகாரிகளை கேட்டுக்கொண்டார். அருகில் இருந்த கோயிலுக்கும் சென்று மழையால் பாதித்த பகுதிகளை பார்வையிட்டு அங்கு இருந்த மக்களிடமும் குறைகளை கேட்டறிந்தார்.
தகவல்:-
நாகை சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம்.
04.12.17