சென்னை.ஏப்.5., ஆர்.கே.நகர் சட்டமன்ற தொகுதிக்குட் பட்ட கொருக்குப்பேட்டை 47-வது வார்டில் உள்ள அனைத்து பணிமனைகளிலும் மனிதநேய ஜனநாயக கட்சியின் மத்திய சென்னை மாவட்ட செயலாளர் முஹம்மது ஹாலித் தலைமையில் பைரோஸ், ஜாவித் மற்றும் கிளை நிர்வாகிகள், உறுப்பினர்கள், பெண்கள் என அனைவரும், மஜகவின் ஆதரவு பெற்ற அதிமுக அம்மா கட்சியின் வேட்பாளர் டி.டி.வி.தினகரன் அவர்களை ஆதரித்து தொகுதியின் வாக்காளர்களிடம் தொப்பி சின்னத்திற்கு வாக்குகள் சேகரிக்கப்பட்டது. தகவல்: தகவல் தொழில்நுட்ப அணி, மனிதநேய ஜனநாயக கட்சி. #MJK_IT_WINK மத்திய சென்னை. 04.04.2017
செய்திகள்
தோழர் ஃபாரூக் படுகொலை கண்டனக் கூட்டம்.! மஜக மாநில இளைஞர் அணி செயலாளர் சிறப்புரை..!!
சென்னை.ஏப்.4., திராவிடர் விடுதலைக் கழக தோழர் ஃபாரூக் அவர்களின் படுகொலையை கண்டித்து துவங்கு இலக்கிய அமைப்பின் சார்பில் சென்னை மைலாப்பூரில் கவிக்கோ மன்றத்தில் கண்டன கூட்டம் நடைபெற்றது. இதில் மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில இளைஞரணி செயலாளர் J. ஷமீம் அஹ்மது அவர்கள் கலந்து கொண்டு கண்டன சிறப்புரை நிகழ்த்தினார். இக்கூட்டத்தில் திராவிடர் விடுதலை கழகம் கொளத்தூர் மணி, தமிழர் பேரவை சுப.வீரபாண்டியன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அப்துல் ரஹ்மான், விடுதலை சிறுத்தை கட்சி ஆளூர் ஷாநவாஸ், மமக ஜவாஹிருல்லா ஆகியோர் கலந்துக்கொண்டனர். தகவல்: தகவல் தொழில்நுட்ப அணி, மனிதநேய ஜனநாயக கட்சி. #MJK_IT_WINK சென்னை. 04.4.2017
அடியக்கமங்கலம் கிளை ஆலோசனை கூட்டம்…
திருவாரூர்.ஏப்.05., மனிதநேய ஜனநாயக கட்சியின் அடியக்கமங்கலம் கிளை ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அக்கூட்டத்தில் கிளை துணை செயலாளர் ஹசன் குத்தூஸ் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட துணை செயலாளர் நிஜாமுதீன் மற்றும் திருவாரூர் ஒன்றிய செயலாளர் ஹாஜா மைதீன் அவர்கள் முன்னிலை வகித்தனர். தீர்மானங்கள் 1) கோடை காலங்களில் நீர் மோர் மற்றும் தண்ணீர் பந்தல் அமைப்பது என்றும் தீர்மானம் நிறவேற்றப்பட்டது. 2) இன்ஷா அல்லாஹ் விரைவில் புதிய கொடி மரங்கள் அமைக்க வேண்டும் என்றும் அதற்கான இடங்கள் மணற்கேணி தெரு மற்றும் பட்டக்கால் தெரு போன்ற இடங்களில் அமைப்பது என்றும் தீர்மானம் நிறவேற்றப்பட்டது. 3) அமீர்அலி S/o சுல்தான் அவர்களை கிளை துணை செயலாராக அக்கிளை மாவட்ட நிர்வாகத்திற்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. 4) தண்ணீர் மற்றும் மோர் பந்தலை திறப்பதற்கு மாவட்ட நிர்வாகிகளை அழைப்பது என தீர்மானம் நிறைவேற்றபட்டது. தகவல்; தகவல் தொழில்நுட்ப அணி, மனிதநேய ஜனநாயக கட்சி. #ⓂJK_IT_WING திருவாரூர் மாவட்டம் 04-04-2017
முத்துப்பாட்டையில் இரு முக்கிய பிரச்சனைகளுக்காக களம் இறங்கிய மஜக…
திருவாரூர்.ஏப்.05., முத்துப்பேட்டையில் கடந்த சில நாட்களாக 'HP' கேஸ் சிலிண்டர் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக மஜகவினர் புகார்!", "15 வது வார்டில் குடி தண்ணீரில் சாக்கடை கலப்பதாக பேரூராட்சியில் மஜகவினர் புகார்!" முத்துப்பேட்டையில் HP கேஸ் சிலிண்டர்கள் விநியோகத்தின்போது பொதுமக்களிடம் நிர்ணயிக்கப்பட்டுள்ள விலையை விட கூடுதலாக வசூலிப்பது குறித்து தொடர்ச்சியாக பொதுமக்கள் புகார் எழுப்பி வந்தனர். இதனையொட்டி நேற்று நடந்த மஜக ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. உடனடியாக களம் இறங்கிய மனிதநேய ஜனநாயக கட்சியின் நகர நிர்வாகிகள் 04-04-2017 இன்று காலை நகர செயலாளர் தக்பீர் #நெய்னா_முகம்மது அவர்கள் தலைமையில் நகர துணைச் செயலாளர்கள் அஜீஸ் ரஹ்மான், #கமால்_நாசர், #முகம்மது_அசாருதீன் ஆகியோர் HP நிறுவனத்தின் மேலாளர் வினோத்தை சந்தித்து புகார் அளித்து முறையிட்டனர். மஜக நிர்வாகிகளிடம் அதுபோன்ற கூடுதல் கட்டணம் பெறுவதில்லை என்றும் அவ்வாறு ஊழியர்கள் பொதுமக்களிடம் விலையைவிட கூடுதலாக கட்டணம் வசூலித்தால் சம்பவ இடத்திலேயே அவ்வாறு வசூலிப்பவரை பிடித்து எங்களுக்கு தகவல் கொடுத்தால் அத்தகையவர்களின் மீது நடவடிக்கை எடுப்பதாக உறுதியளிக்கப்பட்டது. அதேபோன்று முத்துப்பேட்டை பேரூராட்சிக்குட்பட்ட 15வது வார்டில் குடி தண்ணீரில் சாக்கடை கலப்பதாக பொதுமக்கள் தகவல் கூறிய நிலையில் அது குறித்து
முத்துப்பேட்டை நகர மஜக ஆலோசனை கூட்டம்…
திருவாரூர்.ஏப்.04., முத்துப்பேட்டை நகர மனிதநேய ஜனநாயக கட்சியின் ஆலோசனை கூட்டம் 03/04/2017 அன்று முன்னால் நகர செயலாளர் முகம்மது மைனுதீன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் புதிய பொறுப்பாளர்களை தேர்வு செய்து மற்றும் மிக முக்கியமான தீர்மானங்கள் நிறவேற்றப்பட்டது... பொறுப்பாளர்கள் நகர செயலாளர் நைனா மொஹம்மத் 8012053383 நகர பொருளாளர் முகம்மது இத்ரீஸ் 8438337003 நகர துணை செயலாளர் முகம்மது அசாருதீன் 9944773658 கமால் நாசர் 9566356063 அஜீஸ் ரஹ்மான் 9677327076 ஆகியோரை முத்துப்பேட்டை நிர்வாகிகளாக தேர்ந்தெடுக்கப்பட்டனர் மற்றும் சில முக்கிய தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன. தீர்மானங்கள் 1. முத்துப்பேட்டை பகுதியில் கேஸ் விநியோகம் செய்யும் நபர்கள், கொடுக்கப்படுகின்ற ரசீதுக்கு மேல் பணம் வாங்குவதால் அதற்கு உண்டான அதிகாரிகளிடம் புகார் மனு கொடுக்கப்பட வேண்டும் என்று முதல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. 2. முத்துப்பேட்டை நகரத்தில் பிரமாண்டமான முறையில் மிகப்பெரிய பொது கூட்டம் ஏற்பாடு செய்யவேண்டும் அதில் மாநில பொது செயலாளர் மற்றும் மாநில பொருளாளர் இருவரையும் வைத்து நடத்தவேண்டும் என்று தீர்மானம் நிறவேற்றப்பட்டது. 3. கோடைக்காலமாக இருப்பதால் தலைமையின் அறிவிப்பின் படி மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பாக தண்ணீர் பந்தல் அமைப்பது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 4. வருகின்ற உள்ளாட்சி தேர்தலில் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பாக இரு நபர்களை மட்டும் போட்டியிட