முத்துப்பாட்டையில் இரு முக்கிய பிரச்சனைகளுக்காக களம் இறங்கிய மஜக…

image

திருவாரூர்.ஏப்.05., முத்துப்பேட்டையில் கடந்த சில நாட்களாக ‘HP’ கேஸ் சிலிண்டர் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக மஜகவினர் புகார்!”,
“15 வது வார்டில் குடி தண்ணீரில் சாக்கடை கலப்பதாக பேரூராட்சியில் மஜகவினர் புகார்!” முத்துப்பேட்டையில் HP கேஸ் சிலிண்டர்கள் விநியோகத்தின்போது பொதுமக்களிடம் நிர்ணயிக்கப்பட்டுள்ள விலையை விட கூடுதலாக வசூலிப்பது குறித்து தொடர்ச்சியாக பொதுமக்கள் புகார் எழுப்பி வந்தனர். இதனையொட்டி நேற்று நடந்த மஜக ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

உடனடியாக களம் இறங்கிய மனிதநேய ஜனநாயக கட்சியின் நகர நிர்வாகிகள் 04-04-2017 இன்று காலை நகர செயலாளர் தக்பீர் #நெய்னா_முகம்மது அவர்கள் தலைமையில் நகர துணைச் செயலாளர்கள் அஜீஸ் ரஹ்மான், #கமால்_நாசர், #முகம்மது_அசாருதீன் ஆகியோர் HP நிறுவனத்தின் மேலாளர் வினோத்தை சந்தித்து புகார் அளித்து முறையிட்டனர்.

மஜக நிர்வாகிகளிடம் அதுபோன்ற கூடுதல் கட்டணம் பெறுவதில்லை என்றும் அவ்வாறு ஊழியர்கள் பொதுமக்களிடம் விலையைவிட கூடுதலாக கட்டணம் வசூலித்தால் சம்பவ இடத்திலேயே அவ்வாறு வசூலிப்பவரை பிடித்து எங்களுக்கு தகவல் கொடுத்தால் அத்தகையவர்களின் மீது நடவடிக்கை எடுப்பதாக உறுதியளிக்கப்பட்டது.

அதேபோன்று முத்துப்பேட்டை பேரூராட்சிக்குட்பட்ட 15வது வார்டில் குடி தண்ணீரில் சாக்கடை கலப்பதாக பொதுமக்கள் தகவல் கூறிய நிலையில் அது குறித்து பேரூராட்சி செயளாலரை இன்று மஜக நிர்வாகிகள் சந்தித்து புகார் அளித்தனர். உடனடியாக நடவடிக்கை மேற்கொள்வதாக மஜகவினரிடம் உத்திரவாதம் அளிக்கப்பட்டது.

தகவல் :
தகவல் தொழில்நுட்ப அணி,
மனிதநேய ஜனநாயக கட்சி.
#MJK_IT_WING
முத்துப்பேட்டை நகரம்
திருவாரூர் மாவட்டம்.
04.04.17