பெங்களூரு.நவ.08., மனிதநேய ஜனநாயக கட்சி (மஜக) கர்நாடகா - பெங்களூரு மாநகரச் செயலாளர் K.M.J.பாபு அவர்கள் தலைமையில், மஜக பெங்களூரு நிர்வாகிகள் மற்றும் மஜக சொந்தங்கள் கர்நாடகா KMMT தலைவர் முக்தார் அஹமது அவர்களுடன் மரியாதை நிமித்தமாக சந்திப்பு நடத்தினர். நிகழ்வின் போது கர்நாடகா KMMT தலைவர் ஜனாப். முக்தார் அஹமது அவர்களுக்கு K.M.J.பாபு (கர்நாடகா மஜக பெங்களூரு மாநகர செயலாளர்) பொன்னாடை போர்த்தி சிறப்பித்தார். உடன் மஜக கர்நாடகா பெங்களூரு மாநகர பொருளாளர் K.M.J.சல்மான் மற்றும் எலஹங்கா செயலாளர் ரஹமத்துல்லா, தேவனஹள்ளி செயலாளர் சாருக் ஆகியோர் இருந்தனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_ IT_WING #KARNATAKA 07-11-2017
செய்திகள்
நெய்வேலியில் மாணவர் இந்தியாவின் எழுச்சி..!
கடலூர்.நவ.08., கடலூர் வடக்கு மாவட்டம் நெய்வேலி நகரத்தில் மாணவர் இந்தியா மாவட்ட செயலாளர் ரியாஸ் ரஹ்மான் தலைமையில் பத்துக்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் மாணவர் இந்தியாவில் இணைந்தனர். இதில் மாணவர் இந்தியா நகர துணை செயலாளர் சதாம் ஹுசைன் முன்னிலை வகித்தார். இதில் சிறப்பு அழைப்பாளராக மனிதநேய ஜனநாயக கட்சியின் மாவட்ட செயலாளர் N.இப்ராஹிம் , தலைமை செயற்குழு உறுப்பினர் P. ஷாஜகான், மாவட்ட இளைஞர் அணி து.செயலாளர் A.மன்சூர் , நகர செயலாளர் O.A.K.நூர் முகமது ஆகியோர் கலந்து கொண்டனார். தகவல்; #மாணவர்_இந்தியா_ஊடகபிரிவு. #கடலூர்_வடக்கு
எண்ணூர் கொசஸ்தலை ஏரியை ஆய்வு செய்த மஜக மாநிலச் செயலாளர்..!
சென்னை.நவ.07., நேற்று 06.11.2017 எண்ணூர் பகுதியில் கொசஸ்தலை ஏரியில் அனல் மின் நிலைய சாம்பல் கழிவுகள் கலப்பதையும், ஏரியின் குறுக்கே பாதை அமைப்பது குறித்தும் மனிதநேய ஜனநாயக கட்சி மாநிலச் செயலாளர் என்.ஏ.தைமிய்யா அவர்கள் பார்வையிட்டார். உடன் மாநில துணைச் செயலாளர் புதுமடம் அனீஸ், மாணவர் இந்தியா மாநில செயலாளர் முஹம்மது அஸாருதீன் மற்றும் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட செயலாளர் நாஸர், மாவட்ட பொருளாளர் ஜாஃபர், இளைஞர் அணிச் செயலாளர் கரிமுல்லாஹ், வர்த்தகரணி செயலாளர் நிஜாம் ஆகியோர் பார்வையிட்டனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #திருவள்ளூர்_கிழக்கு
பல வருடங்களாக தூர்வார ப்படாத மேலப்பாளையம் கண்ணிமார் குளம்..! குளத்தை பார்வையிட்ட மஜக நிர்வாகிகள்…!!
நெல்லை.நவ.07., திருநெல்வேலி கிழக்கு மாவட்டம் மேலப்பாளையம் ஹாமீம்புரம் பகுதியில் அமைந்துள்ள கலிமா குளம் என்று அழைக்கப்படும் கண்ணிமார் குளத்தை தூர்வாரபடாமல் மணல் மேடாகவும் கருவேல மரங்கள் நிறைந்து காடாகவும் மாறி இருக்கும் நிலையில் அந்த மிகப்பெரிய குளத்தை தூர்வாரி ஆழப்படுத்தி சுத்தம் செய்து பாதுகாத்திட வலியுறுத்தி பல ஆண்டுகளாக அனைத்து இயக்கங்களும், கட்சிகளும் போராடி வருகிறது அந்த வகையில் மனித நேய ஜனநாயக கட்சியும் அந்த கண்ணிமார் குளத்தை தூர்வாரி ஆழப்படுத்தி சுற்றுசுவர் ஏழுப்புவதற்கும் போராடி வருகிறது. அதன் தொடர்ச்சியாக இன்று மேலப்பாளையம் வருகை புரிந்த தலைமை செயற்குழு உறுப்பினர் A.R.சாகுல் ஹமீத் அவர்களின் தலைமையில் நெல்லை கிழக்கு மாவட்ட நிர்வாகிகளுடன் அந்த குளத்தை நேரில் பார்வையிட்டனர். அந்த குளத்தை சுத்தம் படுத்தி அந்த குளத்தை பாதுகாக்க தொடர்ந்து போராடி வரும் டிப்டாப் தமிழன் குழுவின் நிர்வாகி முஜாஹித் சிக்கி அவர்கள் அந்த குளத்தை பற்றியும் குளத்தை பாதுகாக்க மேற்கொண்டு வரும் பணிகள் குறித்தும் விவரித்தார். மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பாக அந்த குளத்தை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி MLA விடம் இது சம்பந்தமாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்துவோம்
மஜக சேலம் மாநகர் மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம்…
சேலம்.நவ.07., நேற்று முன்தினம் 5.11.2017 ஞாயிற்றுக்கிழமை காலை 11மணி அளவில் சேலம் மாவட்ட மனிதநேய ஜனநாயக கட்சியின் செயல்வீரர் கூட்டம் சிறப்பாக நடைபெற்றது. இதில் சேலம் மாவட்ட செயலாளர் A.சாதிக் பாஷா அவர்கள் தலைமை தாங்கினார், மாவட்ட பொருளாளர் U.அமிர் உசேன் அவர்கள் சிறப்புரை ஆற்றினார். இக்கூட்டத்தில் மாநில துணை செயலாளர் பாபு ஷாஹின்ஷா மற்றும் தலைமை செயற்குழு உறுப்பினர் I. ஹைதர் அலி அவர்கள் சிறப்புரை நிகழ்த்தினார்கள். மாவட்ட துணை செயலாளர்கள் O.S.பாபு A.மஹபுப் அலி A.அம்ஜத் அலி முன்நிலை வகிக்க, மாவட்ட இளைஞரணி செயலாளர் A.அஸ்லாம் கான், மாவட்ட வர்த்தக அணி செயலாளர் S.முகமது அலி, மாவட்ட தொழில்சங்க அனி செயலாளர் K.சதாம் உசேன், மாவட்ட வழக்கறிஞர் அணி செயலாளர் H.முனவர்கான், மாணவர் இந்தியா செயலாளர் அப்ரார், கொன்டாலாம்பட்டி பகுதி செயலாளர் D.சர்புதீன், அஸ்தம்பட்டி பகுதி செயலாளர் சாகுல் ஹமீது மற்றும் கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர். மாவட்ட துணை செயலாளர் H.ஷேக் ரபீக் அவர்கள் நன்றி உரை நிகழ்த்தினார் மற்றும் இக்கூட்டத்தில் டிசம்பர்-6 அன்று நடக்க உள்ள ரயில் நிலையம் முற்றுகை போராட்டம சிறப்பாக நடத்துவது என்றும் திர்மானம் நிறை வேற்றப்பட்டது. #தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #சேலம்_மாநகர்_மாவட்டம்