சேலம்.நவ.07., நேற்று முன்தினம் 5.11.2017 ஞாயிற்றுக்கிழமை காலை 11மணி அளவில் சேலம் மாவட்ட மனிதநேய ஜனநாயக கட்சியின் செயல்வீரர் கூட்டம் சிறப்பாக நடைபெற்றது.
இதில் சேலம் மாவட்ட செயலாளர் A.சாதிக் பாஷா அவர்கள் தலைமை தாங்கினார், மாவட்ட பொருளாளர் U.அமிர் உசேன் அவர்கள் சிறப்புரை ஆற்றினார்.
இக்கூட்டத்தில் மாநில துணை செயலாளர் பாபு ஷாஹின்ஷா மற்றும் தலைமை செயற்குழு உறுப்பினர் I. ஹைதர் அலி அவர்கள் சிறப்புரை நிகழ்த்தினார்கள்.
மாவட்ட துணை செயலாளர்கள் O.S.பாபு A.மஹபுப் அலி A.அம்ஜத் அலி முன்நிலை வகிக்க, மாவட்ட இளைஞரணி செயலாளர் A.அஸ்லாம் கான், மாவட்ட வர்த்தக அணி செயலாளர் S.முகமது அலி, மாவட்ட தொழில்சங்க அனி செயலாளர் K.சதாம் உசேன், மாவட்ட வழக்கறிஞர் அணி செயலாளர் H.முனவர்கான், மாணவர் இந்தியா செயலாளர் அப்ரார், கொன்டாலாம்பட்டி பகுதி செயலாளர் D.சர்புதீன், அஸ்தம்பட்டி பகுதி செயலாளர் சாகுல் ஹமீது மற்றும் கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
மாவட்ட துணை செயலாளர் H.ஷேக் ரபீக் அவர்கள் நன்றி உரை நிகழ்த்தினார் மற்றும் இக்கூட்டத்தில் டிசம்பர்-6 அன்று நடக்க உள்ள ரயில் நிலையம் முற்றுகை போராட்டம சிறப்பாக நடத்துவது என்றும் திர்மானம் நிறை வேற்றப்பட்டது.
#தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#சேலம்_மாநகர்_மாவட்டம்