You are here

மே17 இயக்க மாநாட்டு பொதுக்கூட்டம்… மஜக துணைச்செயலாளர் அஸாருதீன் பங்கேற்று சிறப்புரை…

பிப்.27.,

மே-17 இயக்கத்தின் 15-ஆம் ஆண்டு தினத்தை முன்னிட்டு இரண்டு நாள் நிகழ்வின் நிறைவாக வெல்க தமிழ் தேசியம் மாநாட்டு பொதுக்கூட்டம் மே-17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி தலைமையில் சைதாப்பேட்டையில் நடைப்பெற்றது.

இக்கூட்டத்தில் மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில துணைச்செயலாளர் A.M.அஸாருதீன் கலந்துக்கொண்டு சிறப்புரையாற்றினார்.

இந்நிகழ்வில் தமிழறிஞர்களின் சாதனைகள், தமிழ்நாட்டு நலன் சார்ந்த பணிகளில் ஈடுபட்டு வரும் சான்றோர்களுக்கு விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.

இதில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, நக்கீரன் கோபால், திராவிடர் கழக துணைப்பொதுச்செயலாளர் பிரின்ஸ் என்னரசு பெரியார், கொங்கு இளைஞர் பேரவை தலைவர் தனியரசு, விடுதலை தமிழ்ப்புலிகள் கட்சி தலைவர் குடந்தை அரசன், மே17 இயக்க ஒருங்கிணைப்பாளர் பிரவீன்

மேலும் மாணவர் இந்தியா தலைவர் பஷீர் அஹமது மற்றும் மாவட்ட நிர்வாகிகள் கலந்துக்கொண்டனர்.

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#தென்சென்னை_கிழக்கு
25.02.2024.

Top