பிப்.27.,
ஐக்கிய அரபு அமீரகத்தில் வாழும் தமிழக மக்களிடையே கடந்த 8 ஆண்டுகளாக சிறப்பாக செயல்பட்டு வரும் சேவை அமைப்பாக மனிதநேய கலாச்சாரப் பேரவை திகழ்கிறது.
தமிழர் ஒன்றுகூடல்கள், சமூக நல்லிணக்க பண்பாட்டு நிகழ்ச்சிகள்,இஃப்தார் நிகழ்ச்சிகள், இரத்ததான முகாம்கள், இந்திய சுதந்திர தின நிகழ்ச்சிகள், அமீரக தேசிய தின நிகழ்ச்சிகள், என MKP பல களங்களிலும் சேவையாற்றி வருகிறது.
தாயகத்திலிருந்து தலைவர்களை, பிரபலங்களை அழைத்து வந்து நிகழ்ச்சி நடத்துதல், அதில் அமீரக அதிகாரிகளை , பிரமுகர்களை பங்கேற்க செய்தல் என செயல்பட்டு வரும் MKP தாயகத்திலிருந்து வரும் தமிழர்களுக்கு வேலைவாய்ப்பை பெற்றுக் கொடுக்கும் பணிகளையும் செய்து கொடுக்கிறது.
கடந்த 8 ஆண்டுகளில் அமீரகத்தில் தமிழக மக்கள் பங்கேற்ற அதிகமான மாநாடுகளை, மக்கள் ஒன்றுகூடல்களை நடத்திய அமைப்பு இதுவே என்பதும் குறிப்பிடத்தக்கது.
அமீரக மண்டல செயலாளராக பணியாற்றி வந்த டாக்டர் அசாலி அகமது அவர்கள் தலைமையில் கடந்த மூன்று ஆண்டுகளாக செயல்பட்டு வந்த நிர்வாகம் நிறைவு பெற்று புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.
அவர்கள் அனைவரும் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற மஜக தலைவர் மு.தமிமுன் அன்சாரியிடம் வாழ்த்துப் பெற்றனர்.
இந்நிகழ்வுக்கு துணைப் பொதுச் செயலாளர் மதுக்கூர் ராவுத்தர் ஷா முன்னிலை வகித்தார்.
தேர்வு செய்யப்பட்ட புதிய நிர்வாகிகள் விபரம் பின்வருமாறு:
மண்டல செயலாளர் :
தோப்புத் துறை
Y.அப்துல் ரெஜாக் ( அஜ்மான்)
அவைத்தலைவர் : மதுக்கூர்.S.அப்துல் காதர் ( ஷார்ஜா )
பொருளாளர் :
லால்பேட்டை .Z.பயாஸ் அஹ்மத் ( துபை)
துணை செயலாளர்கள்:
பொறியாளர். மதுரை.A.முகம்மது ரபீ (துபை)
M.ரசூல் முகம்மது ( அபுதாபி )
கட்டிமேடு, A.ஜாகிர் ஹுசேன் ( துபை)
மூத்த ஆலோசகர்:
J.ஷேக் தாவூது ( அல்அயன்)
கெளரவ ஆலோசகர் :
H.அபுல் ஹஸன் ( துபை)
கொள்கை பரப்பு செயலாளர் :
லால்பேட்டை B.ரஹ்மத்துல்லா ( துபை)
வணிகர் அணி செயலாளர்:
கீழக்கரை. H.M.S. பிலால் (துபை)
தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர் :
Y.M.ஜியாவுல் ஹக். ( ஷார்ஜா )
செயற்குழு உறுப்பினர்கள் :
தோப்புத் துறை H.ஹம்தான். ( துபை)
அடியக்கமங்கலம். A.யூசுப்தீன் ( ஷார்ஜா )
ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
இதுவரை மண்டல செயலாளராக சிறப்பாக செயல்பட்டு வந்த டாக்டர் அசாலி அஹ்மது அவர்கள் தாயக – தலைமை செயற்குழு உறுப்பினராக பொறுப்புயர்வு பெற்றுள்ளதும், இதுவரை மண்ட பொருளாளராக செயல்பட்டு வந்த H. அபுல் ஹஸன் கெளரவ ஆலோசகர் பொறுப்பை ஏற்றுள்ளதும் குறிப்பிடத் தக்கது.
புதிதாக தேர்வான நிர்வாகிகள் விரைவில் கூடி துபை, அபுதாபி, ஷார்ஜா, அல் அய்ன், உம்முல் கொய்ன், அஜ்மான், மாநகர நிர்வாகங்களை ஒழுங்குப்படுத்துவது குறித்து முடிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும் புஜாரா, ராசல்கைமா ஆகிய மாநகர நிர்வாகங்களை அமைப்பது குறித்தும் திட்டமிடப்பட்டுள்ளது.
தகவல் :
#MKP_தகவல்_தொழில்நுட்ப_அணி –
#ஐக்கிய_அரபு_அமீரகம்
26/02/2024.