பிப்ரவரி.27.,
பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் நாளை காலை 11 மணிக்கு மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைமை பொதுக்குழு கூட்டம் அதன் தலைவர் மு.தமிமுன் அன்சாரி EX.MLA தலைமையில் மயிலாடுதுறையில் நடைபெற இருக்கிறது.
இக்கூட்டத்தில் பங்கேற்க தமிழக முழுவதிலும் இருந்து இன்று மாலை 6 மணி முதல் மஜக பொதுக்குழு உறுப்பினர்கள் மயிலாடுதுறை நோக்கி புறப்பட்ட வண்ணமுள்ளனர்.
இரயில் நிலையம், பேருந்து நிலையம் ஆகிய இடங்களில் நள்ளிரவு முதல் வந்திறங்கும் பொதுக் குழு உறுப்பினர்களை பொதுக்குழு நடைபெற உள்ள கூரை நாடு நோக்கி அழைத்து செல்ல சிறப்பு வாகன ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.
அவர்கள் ஒய்வெடுக்கவும், அடிப்படை தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளவும் வசதிகள் செய்யப்பட்டுள்ளது.
மனிதநேய ஜனநாயக கட்சியின் நாடாளுமன்ற தேர்தல் நிலைபாடு குறித்து இக்கூட்டத்தில் முக்கியமாக விவாதிக்கப்பட உள்ளதாக தெரிகிறது.
பொதுக்குழு தீர்மானங்களை இறுதி செய்யும் வகையில் இன்று இரவு 9 மணிக்கு சிறப்பு நிர்வாகக் குழு கூட்டமும் நடைபெற உள்ளது.
இதில் பொதுச் செயலாளர் மெளலா. நாசர், பொருளாளர் J.S. ரிஃபாயி, துணைத் தலைவர் மன்னை செல்லச்சாமி, இணைப் பொதுச் செயலாளர் கேப்டன் செய்யது முகம்மது பாரூக், துணைப் பொதுச் செயலாளர் நாச்சிக்குளம். தாஜ்தீன் உள்ளிட்ட தலைமை நிர்வாகிகள், மாநில துணைச் செயலாளர்கள், மாநில அணிகளின் செயலாளர்கள் இதில் பங்கேற்க உள்ளனர்.
பொதுக்குழு உறுப்பினர்களை வரவேற்று மயிலாடுதுறை நகர மெங்கும் தட்டிகள் வைக்கபபட்டு, 5 கிலோ மீட்டர் சுற்றளவுக்கு கட்சி கொடிகளும் கட்டப்பட்டுள்ளது.
நகரமெங்கும் வரவேற்பு சுவரொட்டிகளும் ஒட்டப்பட்டுள்ளன.
மாவட்ட வாரியாக வருகை தருபவர்கள் தங்கள் அழைப்பிதழை கொடுத்து பதிவிட்டு, அனுமதி பேட்ஜ் பெற்று செல்லும் வகையில் தனித்தனி நுழைவாயில்களும் அமைக்கப்பட்டுள்ளது.
காலை, மதியம் இரு வேளைகளும் பொதுக் குழு உறுப்பினர்களுக்காக சுவையான சைவ, அசைவ உணவுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது
பொதுக் குழு ஏற்பாட்டு குழுத் தலைவர் நாச்சிக்குளம். தாஜ்தீன் தலைமையில் நிர்வாகிகள் இங்கு 5 நாட்களாக முகாமிட்டு பொதுக் குழு பணிகளை செவ்வனே ஒருங்கிணைத்து வருகின்றனர்.
தகவல்:
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#தலைமையகம்
27.02.2024.