நெல்லை.நவ.07., திருநெல்வேலி கிழக்கு மாவட்டம் மேலப்பாளையம் ஹாமீம்புரம் பகுதியில் அமைந்துள்ள கலிமா குளம் என்று அழைக்கப்படும் கண்ணிமார் குளத்தை தூர்வாரபடாமல் மணல் மேடாகவும் கருவேல மரங்கள் நிறைந்து காடாகவும் மாறி இருக்கும் நிலையில் அந்த மிகப்பெரிய குளத்தை தூர்வாரி ஆழப்படுத்தி சுத்தம் செய்து பாதுகாத்திட வலியுறுத்தி பல ஆண்டுகளாக அனைத்து இயக்கங்களும், கட்சிகளும் போராடி வருகிறது அந்த வகையில் மனித நேய ஜனநாயக கட்சியும் அந்த கண்ணிமார் குளத்தை தூர்வாரி ஆழப்படுத்தி சுற்றுசுவர் ஏழுப்புவதற்கும் போராடி வருகிறது.
அதன் தொடர்ச்சியாக இன்று மேலப்பாளையம் வருகை புரிந்த தலைமை செயற்குழு உறுப்பினர் A.R.சாகுல் ஹமீத் அவர்களின் தலைமையில் நெல்லை கிழக்கு மாவட்ட நிர்வாகிகளுடன் அந்த குளத்தை நேரில் பார்வையிட்டனர்.
அந்த குளத்தை சுத்தம் படுத்தி அந்த குளத்தை பாதுகாக்க தொடர்ந்து போராடி வரும் டிப்டாப் தமிழன் குழுவின் நிர்வாகி முஜாஹித் சிக்கி அவர்கள் அந்த குளத்தை பற்றியும் குளத்தை பாதுகாக்க மேற்கொண்டு வரும் பணிகள் குறித்தும் விவரித்தார்.
மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பாக அந்த குளத்தை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி MLA விடம் இது சம்பந்தமாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்துவோம் என வாக்குறுதி அளித்தார்.
இந்த நிகழ்வில் மாநில செயற்குழு உறுப்பினர் நெல்லை அ.அப்துல் வாஹித், நெல்லை கிழக்கு மாவட்ட செயலாளர் A.கலில் ரஹ்மான், மாவட்ட பொருளாளர் S.சேக் இப்ராஹிம், மாவட்ட தொழிற்சங்க செயலாளர் நவாப் அலி மற்றும் துபாய் மண்டல நிர்வாகி முகம்மது சபிர் ஆகியோர் உடன் இருந்தனர்.
#தகவல்:
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#நெல்லை_கிழக்கு_மாவட்டம்.
07-11-2017