இந்தியாவின் 75-வது சுதந்திர தின விழா நாடு முழுவதும் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது, மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பாக தமிழகம் முழுவதும் சுதந்திரதின விழா நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு நிகழ்வாக மத்திய சென்னை கிழக்கு மாவட்டம் புரசைவாக்கம் மற்றும் புதுப்பேட்டை ஆகிய இடங்களில் சுதந்திர தின விழா நிகழ்ச்சி நடைபெற்றது. புதுப்பேட்டையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மஜக மாநில செயலாளர் சீனி முஹம்மது அவர்களும், புரசைவாக்கத்தில் நடைபெற்ற நிகழ்வில் மீனவர் அணி மாநில செயலாளர் பார்த்திபன் அவர்களும் தேசியக் கொடியை ஏற்றி வைத்தனர். நிறைவாக அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது. சமூக இடைவெளியுடன் நடைபெற்ற இந்நிகழ்வுகளில் மாவட்டச் செயலாளர் பிஸ்மில்லாஹ் கான், மாவட்ட துணைச் செயலாளர்கள் காஜா மொய்தீன், ரவூப் ரஹிம் மேலும் TM.யூசுப் உள்ளிட்ட மாவட்ட, பகுதி, கிளை நிர்வாகிகள் பங்கேற்றனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKITWING #மத்தியசென்னை_கிழக்கு 15.08.2021
Tag: 75வது சுதந்திர தினம்
75வது சுதந்திர தின விழா! மேட்டுப்பாளையத்தில் மஜக சார்பில் தேசிய கொடியேற்றி கொண்டாட்டம்!
இந்திய தேசத்தின் 75,வது சுதந்திர தினத்தை முன்னிட்டு மனிதநேய ஜனநாயக கட்சி கோவை வடக்கு மாவட்டத்தின் சார்பாக தேசிய கொடி ஏற்றும் நிகழ்ச்சி மாவட்ட அலுவலகம் முன்பு நடைபெற்றது. இதில் மாவட்ட பொருளாளர் M.சுல்தான் முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளர் முகமது அப்பாஸ் அவர்கள் தேசியக் கொடியை ஏற்றி பொதுமக்களுக்கும், காவலர்களுக்கும், இனிப்பு வழங்கினார். இந்நிகழ்ச்சியில் தலைமை செயற்குழு உறுப்பினர் A.முஹம்மது நிவாஸ், மாவட்ட துணைச் செயலாளர்கள் M.காஜாமைதீன், R.யாசர் அரபாத், A.ஷேக் மைதீன், SMR பாரி, மாவட்ட இளைஞரணி செயலாளர் M.ஆரிஃப் அப்பாஸ், மனிதநேய தொழிற்சங்க மாவட்ட செயலாளர் M.காஜா மைதீன், மனித உரிமைகள் அணி மாவட்ட செயலாளர் மகேந்திரன், மற்றும் நிர்வாகிகள் அஜீஸ், அசார், S.முஹம்மது ரபீக், ரமீஜ் ராஜா, இம்தியாஸ், இம்ரான், மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். தகவல் #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKITWING #கோவை_வடக்கு_மாவட்டம் 15.08.2021
75வது சுதந்திர தின விழா! திருவொற்றியூரில் மாநில இளைஞரணி செயலாளர் அஸாருதீன் தேசிய கொடியேற்றினார்.!
நாட்டின் 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு மனிதநேய ஜனநாயக கட்சியின் திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் சார்பில் திருவொற்றியூரில் சுதந்திர தின தேசிய கொடியேற்று நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட செயலாளர் நாசர் தலைமையில் நடைப்பெற்ற நிகழ்விற்கு மாவட்ட பொருளாளர் ஜாஃபர் வரவேற்புரையாற்றினார். மஜக மாநில இளைஞரணி செயலாளர் அஸாருதீன் கொடியேற்றி உறுதிமொழி கோஷங்களை முழங்கினார். நிறைவாக நிகழ்வில் பங்கேற்றவர்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்து. இந்நிகழ்வில் மாவட்ட துணைச்செயலாளர்கள் நிஜாம், மௌலானா, அன்சர் மற்றும் திருவொற்றியூர் பகுதி செயலாளர் வெங்கடேசன் மற்றும் மாவட்ட,பகுதி நிர்வாகிகள் கலந்துக்கொண்டனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKitWING #திருவள்ளூர்_கிழக்கு_மாவட்டம் 15.08.2021
மஜக அந்தியூர் நகரம் சார்பில் சுதந்திர தின விழா!
75வது இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு ஈரோடு மேற்கு மாவட்டம் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பாக அந்தியூர் பள்ளிவாசல் அருகில் தேசிய கொடியேற்று விழா நடைபெற்றது. இதில் மாவட்ட செயலாளர் Ak.ஷானவாஸ், அவர்கள் கலந்து கொண்டு தேசிய கொடியினை ஏற்றி வைத்து பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட செயலாளர் ஷபி, மாணவர்இந்தியா மாவட்ட செயலாளர் அப்பாஸ், நகர செயலாளர் மைதீன் பேக், மற்றும் வார்டு நிர்வாகிகள் பங்கேற்றனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி, #MJKITWING #ஈரோடு_மேற்கு_மாவட்டம் 15.08.2021
75வது சுதந்திர தினம்! குடியாத்ததில் மஜகவின் சுதந்திர தின விழா நிகழ்ச்சி..!
இந்தியாவின் 75-வது சுதந்திர தின விழாவையொட்டி மனிதநேய ஜனநாயக கட்சியின் வேலூர் மாவட்டம், குடியாத்தம் நகர அலுவலகத்தில் தேசிய கொடி ஏற்றும் நிகழ்ச்சி நடைப்பெற்றது. எதிர்கால இந்தியாவின் தூண்கள் என்று சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் நேரு அவர்களால் பெரிதும் விரும்பப்பட்ட குழந்தைகளுக்கு இலவச நோட்டு புத்தகங்கள் எழுதுகோல் மற்றும் இனிப்புகள் வழங்கி சுதந்திர தினம் கொண்டாடப்பட்டது. குடியாத்தம் நகர செயலாளர் S.அனிஸ் அவர்கள் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், மஜக முன்னால் மாநில இளைஞர் அணி பொருளாளர் A.மன்சூர் அஹ்மத் அவர்கள் கலந்து கொண்டு கொடியேற்றி வைத்தார். இதில் மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர் முபாரக் அஹ்மத், நகர இளைஞர் அணி பொருளாளர் அல்தாப், நகர மருத்துவ அணி நிர்வாகிகள் சாதிக் பாஷா,ரஹ்மான் மற்றும் கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர் தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKITWING #வேலூர்_மாவட்டம் 15.08.2021