இந்தியாவின் 75-வது சுதந்திர தின விழா நாடு முழுவதும் இன்று உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது, மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பாக தமிழகம் முழுவதும் சுதந்திரதின விழா நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு நிகழ்வாக செங்கல்பட்டு வடக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட தாம்பரம், பல்லாவரம், அனகாபுத்தூர், கண்டோன்மெண்ட் ஆகிய பகுதிகளில் சுதந்திர தின விழா நிகழ்ச்சிகள் நடைபெற்றது. தாம்பரம் மற்றும் கண்டோன்மெண்டில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மஜக மாநில துணை செயலாளரும், மாவட்ட பொறுப்பாளருமான பல்லாவரம் ஷஃபி அவர்களும், அனகையில் மாவட்ட செயலாளர் ஜாகிர் உசேன் அவர்களும், பல்லாவரத்தில் மாவட்ட பொருளாளர் தில்சாத் அவர்களும் தேசியக் கொடியை ஏற்றி வைத்தனர். நிறைவாக அனைவருக்கும் இனிப்புகள் மற்றும் மாணவ மாணவியர்களுக்கு நோட்டுப் புத்தகங்களும் வழங்கப்பட்டது. சமூக இடைவெளியுடன் நடைபெற்ற இந்நிகழ்வுகளில் மாவட்ட துணைச் செயலாளர்கள் ECR அப்துல் சமது, பல்லாவரம் அஜீஸ், கண்டோன்மெண்ட் அப்துல் சமது, MJTS மாவட்ட செயலாளர் பிராங்கிளின் உள்ளிட்ட மாவட்ட, பகுதி, கிளை நிர்வாகிகள் பங்கேற்றனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKITWING #செங்கை_வடக்கு 15.08.2021
Tag: MJK Party
பொதக்குடியில் மஜக சார்பில் 75வது சுதந்திர தின விழா!
திருவாரூர் மாவட்டம், பொதக்குடியில் மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் சுதந்திர தினத்தை முன்னிட்டு தேசியக் கொடி ஏற்றும் நிகழ்ச்சி மஜக அலுவலகத்தில் நடைபெற்றது. பொதக்குடி ஊர் உறவின் முறை ஜமாத் அறப்பணி சங்க தலைவர் மஹதூம் மைதீன் அவர்கள் தேசிய கொடியை ஏற்றி வைத்தார். இந்நிகழ்வில், T.M.S.அப்துல் கரீம் அவர்கள் முன்னிலையில் மேலப்பள்ளிவாசல் முத்தவல்லி ஹாஜி.லியாகத் அலி, மஜக தலைமை செயற்குழு உறுப்பினர் ஜெய்னுதீன், மாவட்ட துணை செயலாளர் நத்தர் கனி, கிளை நிர்வாகிகள் முனவர் ஹசன், ஜலாலுதீன், ராசித் இலாஹி, ஹபீப் ரஹ்மான், முஹம்மது ஜாவித், முஹம்மது தாஹிர் உள்பட ஜமாத்தார்களும், பொதுமக்களும் திரளாக கலந்து கொண்டனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி, #MJKitWING #திருவாரூர்_மாவட்டம்.
75வது சுதந்திர தினம்.!மஜக செங்கை தெற்கு மாவட்டம் சார்பாக மாபெரும் இரத்ததான முகாம்.! மாநில துணைச்செயலாளர் பல்லாவரம் ஷஃபி நிகழ்வை தொடங்கிவைத்தார்.!
இந்தியாவின் 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பாக தமிழகம் முழுவதும் இன்று பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. அதன் ஒருநிகழ்வாக செங்கல்பட்டு தெற்கு மாவட்டம் சார்பாக கேளம்பாக்கம் நிழல் தன்னார்வ தொண்டு நிறுவனம், சென்னை அன்னை தெரசா இரத்த வங்கி இணைந்து மாபெரும் இரத்ததான முகாம் இன்று நடைபெற்றது. கேளம்பாக்கம் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற முகாமில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் க.வெங்கடேசன் அவர்கள் தலைமை தாங்கினார், அப்துல் ரஷீது, முகம்மது ரஃபி, அப்துல் சர்தார் சமியுல்லா, வனிதா வெங்கடேசன், தீன்பாய் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முகாமிற்கு சிறப்பு அழைப்பாளராக மஜக மாநில துணைச் செயலாளரும், செங்கை தெற்கு மாவட்ட பொறுப்பாளருமான பல்லாவரம் ஷஃபி அவர்கள் கலந்துகொண்டு முகாமை தொடங்கி வைத்து அனைவருக்கும் முன்மாதிரியாக அவரும் இரத்ததானம் செய்தார். முகாமில் தலைமை செயற்குழு உறுப்பினர்கள் முகமது யூசுப், ரஹ்மத்துல்லாஹ், செங்கை வடக்கு மாவட்ட செயலாளர் ஜாகீர், பொருளாளர் தில்ஷாத் அன்சாரி, இனாயத்துல்லா மற்றும் கானத்தூர் கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர் இறுதியாக நைனா முகமது நன்றியுரை கூறினார். முகாமில் இரத்த தானம் செய்த அனைவருக்கும் பாரட்டு சான்றிதழ்
புலிவலத்தில் மஜக சார்பில் 75வது சுதந்திர தின விழா!
திருவாரூர் மாவட்டம், புலிவலத்தில் மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் சுதந்திர தினத்தை முன்னிட்டு தேசியக் கொடி ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. மஜக மாவட்ட பொருளாளர் புலிவலம் ஷேக் அப்துல்லா தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தேசிய கொடி ஏற்றப்பட்டு உறுதி மொழி முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இந்நிகழ்வில், மஜக கிளை நிர்வாகிகளும், சமூக ஆர்வலர்களும் திரளாக கலந்து கொண்டனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி, #MJKitWING #திருவாரூர்_மாவட்டம்.
75வது சுதந்திர தின விழா! கோவையில் MJTS சார்பில் கொடியேற்று விழா!
இந்திய தேசத்தின் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு கோவை மாநகர் மாவட்ட மனிதநேய ஜனநாயக தொழிற்சங்கத்தின் MJTS சார்பில் தேசிய கொடியேற்று விழா நடைபெற்றது. இதில் தகவல் தொழில் நுட்ப அணி மாநில துணை செயலாளர் சம்சுதீன், துணைச் செயலாளர்ATR.பதுருதீன், மாவட்ட தலைவர் அப்துல் சமது, மாவட்ட செயலாளர் ஷாஜகான், வணிகர் சங்க பொறுப்பாளர்கள் நவ்பல் பாபு, ஹாருண், மத்திய பகுதி பொறுப்பாளர் அனிபா, பங்கேற்று புல்லுக்காடு, சாரமேடு, குனியமுத்தூர், போத்தனூர், ஆகிய பகுதிகளில் தேசிய கொடியேற்றி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர். இதில் தொழிற்சங்க மாவட்ட பொருளாளர் ரியாசுதீன், மற்றும் தொழிற்சங்க நிர்வாகிகள் உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டனர். தகவல் #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKITWING #கோவை_மாநகர்_மாவட்டம் 15.08.2021