மே.13., மதுரை கிடாரிபட்டி பகுதியை சேர்ந்த அப்துல்லா என்ற நபர் கொரோனா பாதிப்பால் மரணமடைந்தார். அதை தொடர்ந்து அவரது உறவினர்கள் கோரிக்கையை ஏற்று மனிதநேய ஜனநாயக கட்சி மதுரை புறநகர் மாவட்ட செயலாளர் முபாரக், அவர்கள் தலைமையில் அவரது உடலை பெற்று சுகாரத்துறை அறிவுறுத்திய பாதுகாப்பு வழிமுறையின்படி நல்லடக்கம் செய்தனர். இப்பணியில் வடக்கு மாவட்ட செயலாளர் இப்ராஹிம், தலைமை செயற்குழு உறுப்பினர் புதூர் கனி, மாவட்ட துனை செயலாளர் சதாம் உசேன், மாவட்ட இளைஞர் அணி செயலாளர் சையது அலி, மற்றும் நிர்வாகிகள் ஈடுபட்டனர். தகவல் #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKITWING #மதுரை_வடக்கு_மாவட்டம் 12.05.2021
Tag: மஜக
ஷா நவாஸ் MLA , மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரியுடன் சந்திப்பு!
வேதை.மே.09., #விசிக துணைப் பொதுச்செயலாளரும், நாகையில் புதிதாக வெற்றிப் பெற்றவருமான #ஷா_நவாஸ்_MLA அவர்கள், இன்று #மனிதநேய_ஜனநாயக_கட்சி (மஜக) பொதுச்செயலாளர் #மு_தமிமுன்_அன்சாரி அவர்களை தோப்புத்துறையில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து வாழ்த்துப் பெற்றார். தனது வெற்றிக்கு மஜகவினர் சிறப்பாக பணியாற்றியதற்கு நன்றி தெரிவித்தார். அவருக்கு "பெரியார் அன்றும், என்றும்" என்ற நூலை பொதுச்செயலாளர் அவர்கள் பரிசு அளித்தார், மேலும் நாகையில் ஆற்ற வேண்டிய பணிகள் குறித்து தனது ஆலோசனைகளையும் வழங்கினார். தகவல், #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி, #MJKitWING #நாகை_மாவட்டம்.
மதுரையில் கொரோனா தொற்றால் மரணமடைந்தவரை நல்லடக்கம் செய்த மஜகவினர்!
மே.09.,மதுரை கோரிப்பாளையம் பகுதியை சேர்ந்த நபர் கொரோனா பாதிப்பால் மரணமடைந்தார். அதை தொடர்ந்து அவரது உறவினர்கள் கோரிக்கையை ஏற்று மனிதநேய ஜனநாயக கட்சி மதுரை வடக்கு மாவட்ட செயலாளர் இப்ராஹிம், அவர்கள் தலைமையில் அவரது உடலை பெற்று சுகாரத்துறை அறிவுறுத்திய பாதுகாப்பு வழிமுறையின்படி நல்லடக்கம் செய்தனர். இப்பணியில் தலைமை செயற்குழு உறுப்பினர் புதூர் கனி, மாவட்ட துனை செயலாளர் சதாம் உசேன், மாவட்ட இளைஞர் அணி செயலாளர் பாட்ஷா, மற்றும் நிர்வாகிகள் ஈடுபட்டனர். தகவல் #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKITWING #மதுரை_வடக்கு_மாவட்டம் 08.05.2021
நம்பிக்கையூட்டும் செயல்பாடுகள்! புதிய முதல்வருக்கு மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி வாழ்த்து…
இன்று தமிழகத்தின் புதிய முதல்வராக பொறுப்பேற்றிருக்கும் #திமுக தலைவர் அண்ணன் #தளபதி அவர்களுக்கு மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் மனமார்ந்த நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம். பதவியேற்ற உடனேயே 5 முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்டு பெரும் பாராட்டுகளையும் பெற்றிருக்கிறார். *நகரின் அனைத்து அரசு பேருந்துகளிலும் மகளிர் இலவசமாக பயணிக்கலாம். *ஆவின் பால் விலை லிட்டருக்கு 3 ரூபாய் குறைப்பு. * காப்பீட்டு திட்டத்தின் மூலம் தனியார் மருத்துவமனைகளில் கொரோன சிகிச்சை பெறும் நோயாளிகளின் செலவை அரசே ஏற்கும். *கொரோன நிவாரண நிதி 4000 வழங்கப்படும் , அதில் முதற்கட்டமாக 2 ஆயிரம் வழங்கப்படும். *உங்கள் தொகுதியில் முதலமைச்சர் என்ற தனித்துறை உருவாக்கம்.. என அவர் எடுத்திருக்கும் முக்கிய முடிவுகள் பெரும் நம்பிக்கையை மக்களிடம் ஏற்படுத்தி இருக்கிறது. கொரோன இரண்டாவது அலையால் மக்கள் பெரும் சோகத்திலும், நெருக்கடியிலும் ஆழ்ந்திருக்கும் நிலையில் "யாரும் கவலைப்படாதீர்கள்" என்று சொல்வது போல மாண்புமிகு முதல்வர் அவர்களின் இந்த நடவடிக்கைகள் அமைந்திருக்கிறது. அவர் தலைமையிலான அமைச்சரவை அடுத்தடுத்து பல மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்தி தமிழகத்தை முன்னேற்றப் பாதையில் வழி நடத்திட
பீட்டர் அல்போன்ஸ் மனைவி மரணம்! மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி நேரில் ஆறுதல்!
சென்னை.மே.05., காங்கிரஸ் கட்சியின் முன்னணி தலைவர்களில் ஒருவராகிய பீட்டர் அல்போன்ஸ் அவர்களின் மனைவி ஜெசிந்தா, நேற்று மரணமடைந்தார். அதனை தொடர்ந்து அண்ணாநகரில் உள்ள தேவாலயத்தில் அவரது உடல் வைக்கட்டிருந்தது. இன்று மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன்அன்சாரி அவர்கள் நேரில் சென்று பீட்டர் அல்போன்ஸ் அவர்களுக்கு ஆறுதல் கூறினார். அப்போது காங்கிரஸ் MLA ராஜேஷ், கிறித்தவ நல்லெண்ண இயக்கம் இனிக்கோ இருதயராஜ் MLA., உள்ளிட்டோரும் உடனிருந்தனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKITWING #தலைமையகம் 05.05.2021