நம்பிக்கையூட்டும் செயல்பாடுகள்! புதிய முதல்வருக்கு மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி வாழ்த்து…

இன்று தமிழகத்தின் புதிய முதல்வராக பொறுப்பேற்றிருக்கும் #திமுக தலைவர் அண்ணன் #தளபதி அவர்களுக்கு மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் மனமார்ந்த நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.

பதவியேற்ற உடனேயே 5 முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்டு பெரும் பாராட்டுகளையும் பெற்றிருக்கிறார்.

*நகரின் அனைத்து அரசு பேருந்துகளிலும் மகளிர் இலவசமாக பயணிக்கலாம்.
*ஆவின் பால் விலை லிட்டருக்கு 3 ரூபாய் குறைப்பு.
* காப்பீட்டு திட்டத்தின் மூலம் தனியார் மருத்துவமனைகளில் கொரோன சிகிச்சை பெறும் நோயாளிகளின் செலவை அரசே ஏற்கும்.
*கொரோன நிவாரண நிதி 4000 வழங்கப்படும் , அதில் முதற்கட்டமாக 2 ஆயிரம் வழங்கப்படும்.
*உங்கள் தொகுதியில் முதலமைச்சர் என்ற தனித்துறை உருவாக்கம்..

என அவர் எடுத்திருக்கும் முக்கிய முடிவுகள் பெரும் நம்பிக்கையை மக்களிடம் ஏற்படுத்தி இருக்கிறது.
கொரோன இரண்டாவது அலையால் மக்கள் பெரும் சோகத்திலும், நெருக்கடியிலும் ஆழ்ந்திருக்கும் நிலையில் “யாரும் கவலைப்படாதீர்கள்” என்று சொல்வது போல மாண்புமிகு முதல்வர் அவர்களின் இந்த நடவடிக்கைகள் அமைந்திருக்கிறது.

அவர் தலைமையிலான அமைச்சரவை அடுத்தடுத்து பல மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்தி தமிழகத்தை முன்னேற்றப் பாதையில் வழி நடத்திட எமது வாழ்த்துக்களை தெரிவிக்கிறோம்.

இவன்;
மு.தமிமுன் அன்சாரி
பொதுச்செயலாளர்
#மனிதநேய_ஜனநாயக_கட்சி
07.05.21

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*