நாகை. டிச.21., 2G ஸ்பெக்ட்ரம் தீர்ப்பு வெளியானதும் நாகப்பட்டினத்தில் மஜக பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA அவர்களை பத்தியாளர்கள் சந்தித்து ஸ்பெக்ட்ரம்(2G அலைக்கற்றை) தீர்ப்பு குறித்து கேள்வி எழுப்பினர்.
அதற்க்கு பதில் அளித்தவர், கடந்த பத்து ஆண்டு காலமாக இவ்வழக்கு நாடு முழுக்க கூர்ந்து கவனிக்கப்பட்து.
இந்த வழக்கை வைத்து திமுகவையும், திராவிட கட்சிகளையும் ஊழல் பின்னணி கொண்டதாக சித்தரித்து, திராவிட கட்சிகளை அழித்து விடலாம் என்று டெல்லியில் உள்ள சில தீய சக்திகள் திட்டமிட்டார்கள்.
இப்பொழுது தனி நீதிமன்றம் இவ்வழக்கில் தொடர்புடைய முன்னாள் மத்திய அமைச்சர் திரு.R.ராசா, திருமதி கனிமொழி MP உள்ளிட்ட 11 பேரையும் விடுதலை செய்திருக்கிறது. பத்து ஆண்டு கால வழக்கில் தீர்ப்பு வழங்க பெற்றிருப்பது வரவேற்க்கதக்கது.
இதில் விடுதலை பெற்றவர்களுக்கு மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.
தகவல்;
மஜக தகவல் தொழில்நுட்ப அணி
#MJK_IT_WING.