சென்னை.செப்.01., சிறுபான்மை ஆணைய தலைவர் திரு. பீட்டர் அல்போன்ஸ் அவர்களை மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி இன்று சந்தித்து பல்வேறு கோரிக்கைகளை கையளித்தார். அப்போது துணைப் பொதுச் செயலாளர் தைமிய்யா, மாநிலச் செயலாளர் சீனி முகம்மது ஆகியோரும் உடனிருந்தனர். கல்வி விழிப்புணர்வு, பொருளாதார மேம்பாடு, நல்லிணக்க நடவடிக்கைகள் ஆகியவைகள் குறித்தும் இதில் விவாதித்தனர் பின்னர் கோவை மாநகர மஜக-வினர் கொண்டு வந்த பல்வேறு மக்கள் நல கோரிக்கை மனுக்களும் அவரிடம் அளிக்கப்பட்டது. விரைவில் மாண்புமிகு முதல்வரை சந்திக்கும் போது இவை குறித்து எடுத்துக் கூறுவதாகவும் ஆணைய தலைவர் திரு. பீட்டர் அல்போன்ஸ் அவர்கள் தெரிவித்தார். அப்போது IKP மாநில செயலாளர் இஷாக், கோவை மாநகர் மாவட்ட செயலாளர் MH.அப்பாஸ், மாவட்டப் பொருளாளர் TMS.அப்பாஸ், மாவட்ட துணை செயலாளர்கள் ATR.பதுருதீன், சிங்கை சுலைமான் மற்றும் மனித உரிமை ஆர்வலர் காதர் ஆகியோர்களும் உடனிருந்தனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKITWING #மத்திய_சென்னை 01.09.2021
Month:
முன்னாள் முதல்வர் OPS அவர்களின் மனைவியார் மரணம்.. மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி மற்றும் நிர்வாகிகள் நேரில் ஆறுதல்.!
செப்.01., இன்று அதிமுக ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் முதல்வருமான மாண்புமிகு திரு.O.பன்னீர் செல்வம் அவர்களின் மனைவியார் திருமதி விஜயலட்சுமி அவர்கள் இன்று மாரடைப்பால் காலமானார். இந்நிலையில் பெருங்குடி ஜெம் மருத்துவமனைக்கு சென்று அவரை மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி அவர்கள் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். அப்போது துணைப் பொதுச் செயலாளர் N. தைமியா அவர்களும் உடனிருந்தார். IKP மாநிலச் செயலாளர் கோவை இஷாக், கோவை மாநகர் மாவட்ட செயலாளர் MH.அப்பாஸ், பொருளாளர் TMS.அப்பாஸ், மாவட்ட துணைச்செயலாளர்கள் ATR பதுருதீன், சிங்கை சுலைமான் ஆகியோரும் உடனிருந்தனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி, #MJKitWING #தலைமையகம்.
ஈரோட்டில் மறைந்த மஜக நிர்வாகி இல்லத்திற்கு மாநில பொருளாளா் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது வருகை!
செப்:01., மனிதநேய ஜனநாயக கட்சியின் ஈரோடு கிழக்கு மாவட்ட பொருளாளராக பணியாற்றிய சகோ. முகமது அலி, அவர்கள் சில நாட்களுக்கு முன்பு உடல் நலக் குறைவால் மரணமடைந்தார். இன்று அவரது இல்லத்திற்கு மாநில பொருளாளா் எஸ்.எஸ்.ஹாரூண் ரசீது, Mcom. அவர்கள் வருகை தந்து அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். அவருடன் துணை பொதுச் செயலாளர் சையது அகமது பாருக், மாநில துணை செயலாளா் பாபு சாகின்ஷா, ஆகியோர் உடனிருந்தனர். இந்நிகழ்வில் கிழக்கு மாவட்ட செயலாளர் ஷஃபீக் அலி, மேற்கு மாவட்ட செயலாளா் அந்தியூா் ஷானவாஸ், கிழக்கு மாவட்ட துணைச் செயலாளர்கள் பக்கீர் முகமது, பாபு, மாணவர் இந்தியா மாவட்ட செயலாளா் பயாஸ், IKP மாவட்ட செயலாளா் ஷேக், பகுதி செயலாளா் ஹாரீஸ், மேற்கு மாவட்ட IT Wing மாவட்டச்செயலாளா் சபி , ஆகியோர் உடன் இருந்தனர். தகவல் #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKITWING #ஈரோடு_கிழக்கு_மாவட்டம் 31.08.2021
மஜக தலைமையக நியமன அறிவிப்பு..!
மனிதநேய ஜனநாயக கட்சியின், புதுக்கோட்டை கிழக்கு மாவட்ட பொருளாளராக செயல்பட்டு வரும் அறந்தாங்கி ஷேக் இஸ்மாயில் அவர்கள் கட்சியின், விவசாய அணி மாநில துணைச்செயலாளராக நியமனம் செய்யப்படுகிறார், மனிதநேய சொந்தங்கள் இவருக்கு நிர்வாக ரீதியாக முழு ஒத்துழைப்பு நல்கிட கேட்டுக்கொள்கிறேன். இவண்; மு.தமிமுன் அன்சாரி பொதுச்செயலாளர் #மனிதநேய_ஜனநாயக_கட்சி 31.08.2021
கோவையில் மஜக மாவட்ட செயலாளர் இல்லத்திற்கு மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது வருகை!
ஆக.31., மனிதநேய ஜனநாயக தொழிற்சங்கத்தின் மாநில செயலாளர் கோவை MH.ஜாபர் அலி, மனிதநேய ஜனநாயக கட்சியின் கோவை மாநகர் மாவட்ட செயலாளர் MH.அப்பாஸ், அவர்களின் தந்தையார் அவர்கள் 01.08.2021 அன்று மரணமடைந்தார். அதை தொடர்ந்து மஜக மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது, Mcom. அவர்கள் அவர்களது இல்லத்திற்கு வருகை தந்து குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறினார். அவருடன் துணை பொதுச்செயலாளர் செய்யது அகமது பாருக், மாநில துணை செயலாளர் அப்துல் பஷீர், ஆகியோர் உடனிருந்தனர். இந்நிகழ்வில் IKP மாநில செயலாளர் லேனா இஷாக், தகவல் தொழில் நுட்ப அணி மாநில துணை செயலாளர் சம்சுதீன், மாவட்ட பொருளாளர் TMS.அப்பாஸ், மாவட்ட துணைச்செயலாளர் ATR.பதுருதீன், ஈரோடு மேற்கு மாவட்ட செயலாளர் அந்தியூர் ஷானவாஸ், ஆகியோர் உடனிருந்தனர். தகவல் #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKITWING #கோவை_மாநகர்_மாவட்டம் 31.08.2021