சென்னை.செப்.01., சிறுபான்மை ஆணைய தலைவர் திரு. பீட்டர் அல்போன்ஸ் அவர்களை மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி இன்று சந்தித்து பல்வேறு கோரிக்கைகளை கையளித்தார்.
அப்போது துணைப் பொதுச் செயலாளர் தைமிய்யா, மாநிலச் செயலாளர் சீனி முகம்மது ஆகியோரும் உடனிருந்தனர்.
கல்வி விழிப்புணர்வு, பொருளாதார மேம்பாடு, நல்லிணக்க நடவடிக்கைகள் ஆகியவைகள் குறித்தும் இதில் விவாதித்தனர்
பின்னர் கோவை மாநகர மஜக-வினர் கொண்டு வந்த பல்வேறு மக்கள் நல கோரிக்கை மனுக்களும் அவரிடம் அளிக்கப்பட்டது.
விரைவில் மாண்புமிகு முதல்வரை சந்திக்கும் போது இவை குறித்து எடுத்துக் கூறுவதாகவும் ஆணைய தலைவர் திரு. பீட்டர் அல்போன்ஸ் அவர்கள் தெரிவித்தார்.
அப்போது IKP மாநில செயலாளர் இஷாக், கோவை மாநகர் மாவட்ட செயலாளர் MH.அப்பாஸ், மாவட்டப் பொருளாளர் TMS.அப்பாஸ், மாவட்ட துணை செயலாளர்கள் ATR.பதுருதீன், சிங்கை சுலைமான் மற்றும் மனித உரிமை ஆர்வலர் காதர் ஆகியோர்களும் உடனிருந்தனர்.
தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKITWING
#மத்திய_சென்னை
01.09.2021