மஜக விழுப்புரம் மாவட்ட ஆலோசனை கூட்டம்! மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது பங்கேற்பு!

செப்:02., மனிதநேய ஜனநாயக கட்சியின் விழுப்புரம் மாவட்ட ஆலோசனை கூட்டம் மாவட்ட செயலாளர் முஹம்மது ரிஸ்வான், அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மனிதநேய ஜனநாயக கட்சி மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது, Mcom. அவர்கள் கலந்துகொண்டு மாவட்டத்தின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்து ஆலோசனைகள் வழங்கினார்.

அவருடன் அவைத் தலைவர் சம்சுதீன் நாசர் உமரி, மாநில துணைச் செயலாளர் நெய்வேலி இப்ராஹிம், ஆகியோர் உடனிருந்தனர்.

சமீபத்தில் நடைபெற்ற நிர்வாகக் குழுவில் எடுத்த முடிவின் அடிப்படையில் நிர்வாக வசதிக்காக விழுப்புரம் மாவட்டம் இரண்டாக பிரிக்கப்பட்டது.

விழுப்புரம், விக்கிரவாண்டி, செஞ்சி, ஆகிய சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கிய மாவட்டம் விழுப்புரம் தெற்கு மாவட்டம் என்றும், திண்டிவனம், மயிலம், வானூர் ஆகிய சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கிய மாவட்டம் விழுப்புரம் வடக்கு மாவட்டம் என்றும் பிரிக்கப்பட்டது.

நிறைவாக மாவட்ட பொருளாளர் சவுக்கத் அலி, நன்றியுரை யாற்றினார்.

தகவல்

#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKITWING
#விழுப்புரம்_மாவட்டம்
01.09.2021