முன்னாள் முதல்வர் OPS அவர்களின் மனைவியார் மரணம்.. மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி மற்றும் நிர்வாகிகள் நேரில் ஆறுதல்.!

செப்.01., இன்று அதிமுக ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் முதல்வருமான மாண்புமிகு திரு.O.பன்னீர் செல்வம் அவர்களின் மனைவியார் திருமதி விஜயலட்சுமி அவர்கள் இன்று மாரடைப்பால் காலமானார்.

இந்நிலையில் பெருங்குடி ஜெம் மருத்துவமனைக்கு சென்று அவரை மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி அவர்கள் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

அப்போது துணைப் பொதுச் செயலாளர் N. தைமியா அவர்களும் உடனிருந்தார்.

IKP மாநிலச் செயலாளர் கோவை இஷாக், கோவை மாநகர் மாவட்ட செயலாளர் MH.அப்பாஸ், பொருளாளர் TMS.அப்பாஸ், மாவட்ட துணைச்செயலாளர்கள் ATR பதுருதீன், சிங்கை சுலைமான் ஆகியோரும் உடனிருந்தனர்.

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி,
#MJKitWING
#தலைமையகம்.