கோவையில் மஜக மாவட்ட செயலாளர் இல்லத்திற்கு மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது வருகை!

ஆக.31., மனிதநேய ஜனநாயக தொழிற்சங்கத்தின் மாநில செயலாளர் கோவை MH.ஜாபர் அலி, மனிதநேய ஜனநாயக கட்சியின் கோவை மாநகர் மாவட்ட செயலாளர் MH.அப்பாஸ், அவர்களின் தந்தையார் அவர்கள் 01.08.2021 அன்று மரணமடைந்தார்.

அதை தொடர்ந்து மஜக மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது, Mcom. அவர்கள் அவர்களது இல்லத்திற்கு வருகை தந்து குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறினார்.

அவருடன் துணை பொதுச்செயலாளர் செய்யது அகமது பாருக், மாநில துணை செயலாளர் அப்துல் பஷீர், ஆகியோர் உடனிருந்தனர்.

இந்நிகழ்வில் IKP மாநில செயலாளர் லேனா இஷாக், தகவல் தொழில் நுட்ப அணி மாநில துணை செயலாளர் சம்சுதீன், மாவட்ட பொருளாளர் TMS.அப்பாஸ், மாவட்ட துணைச்செயலாளர் ATR.பதுருதீன், ஈரோடு மேற்கு மாவட்ட செயலாளர் அந்தியூர் ஷானவாஸ், ஆகியோர் உடனிருந்தனர்.

தகவல்

#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKITWING
#கோவை_மாநகர்_மாவட்டம்
31.08.2021