சென்னை.செப்.2., தமிழ்நாடு வக்பு வாரிய தலைவர் ஜனாப் அப்துல் ரஹ்மான் அவர்கள் மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைமையகத்திற்கு வருகை தந்தார். அவரை பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி அவர்கள் வரவேற்று மைக்கேல் ஹார்ட் எழுதிய 'புதிய வரலாறு படைத்தோரின் வரிசை முறை 100 பேர்' என்ற நூலை பரிசளித்தார். அப்போது தலைமை ஒருங்கிணைப்பாளர் மெளலா.நாசர், துணைப் பொதுச் செயலாளர் தைமிய்யா ஆகியோரும் உடனிருந்தனர். அவருடன் பிறைமேடை செய்தி ஆசிரியர் காயல் மஹபூப் அவர்களும் வருகை தந்திருந்தார். சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக இச்சந்திப்பு நடைப்பெற்றது. வக்பு வாரியத்தின் எதிர்கால செயல் திட்டங்கள், காத்திருக்கும் சவால்கள் குறித்து ஜனாப். அப்துல் ரஹ்மான் அவர்கள் விளக்கினார். வக்பு வாரியம் சார்பில் கல்வி நிறுவனங்களை தொடங்குவது குறித்த ஆலோசனை மஜக சார்பில் எடுத்துரைக்கப்பட்டது. இந்நிகழ்வில் மாநில துணைச் செயலாளர்கள் புதுமடம் அனிஸ், பொறியாளர் சைபுல்லாஹ், துரை முகம்மது, இளைஞர் அணி செயலாளர் அசாருதீன், மருத்துவ சேவை அணி செயலாளர் அப்துல் ரஹ்மான், IKP மாநில செயலாளர் கோவை இஷாக் உள்ளிட்ட மஜக-வினரும் உடனிருந்தனர். தகவல், #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKitWING #தலைமையகம் 02.09.2021
Month:
தமிழக மாணவர்களின் நலன் குறித்தான கோரிக்கை மனு! அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்களிடம் மஜக நிர்வாகிகள் நேரில் அளித்தனர்..!
செப்:02., மனிதநேய ஜனநாயக கட்சியின் கோவை மற்றும் திருச்சி மாவட்ட நிர்வாகிகள் இன்று கிரீன்வேஸ் சாலையில் உள்ள பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் இல்லத்தில் அமைச்சர் திரு. அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்களை நேரில் சந்தித்து தமிழக மாணவர்களின் நலன் குறித்தான கோரிக்கை மனுவை அளித்தனர். அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது: கொரோனா காரணமாக கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பள்ளிகள் திறக்கப்படாத சூழ்நிலையில் ஆன்லைன் வகுப்புகள் மூலம் பாடங்கள் நடத்தப்பட்டது. ஆன்லைன் வகுப்புகளில் பங்கேற்க முடியாதவர்கள் அடுத்த வகுப்பிற்கு தேர்ச்சி பெறமாட்டார்கள் எனவும், மேலும் பள்ளிக் கட்டணத்தை செலுத்தாதவர்களும் அதே வகுப்பில் தான் தொடர வேண்டும் என்றும் பல்வேறு பள்ளி நிர்வாகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா சூழலைக் கருத்தில் கொண்டு தமிழக அரசு ஆல் பாஸ் என அறிவித்தபோதும் தனியார் பள்ளிகளின் இது போன்ற நடவடிக்கைகள் மாணவர்களையும், பெற்றோர்களையும் வஞ்சிக்கும் விதமாக உள்ளது. ஆகவே மாண்புமிகு அமைச்சர் அவர்கள் இவ்விசயத்தில் தலையிட்டு தீர்வு காண வேண்டும் என மனுவில் குறிப்பிடப்பட்டது. மனுவைப் பெற்றுக் கொண்ட அமைச்சர் அவர்கள் இது தொடர்பாக நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். இந்நிகழ்வில் IKP மாநில செயலாளர் இசாக், கோவை மாநகர் மாவட்ட
ஆடிட்டர் நியாஸ் இல்ல திருமணம்! மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி நேரில் வாழ்த்து!
செப்.2., சென்னையில் ஆடிட்டர் நியாஸ் இல்ல திருமணம் நேற்று (01.09.2021) நடைப்பெற்றது. மணமகன் அஹமது மாலிக் அவர்களுக்கும், மணமகள் ஆஷிகா ஷஃரீன் அவர்களுக்கும் நடந்த திருமண வரவேற்பில் மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி பங்கேற்று மணமக்களை வாழ்த்தினார். நிகழ்வில் வக்பு வாரிய தலைவர் அப்துல் ரஹ்மான், பராக்கா அதிரை அஷ்ரப் மற்றும் மஜக நிர்வாகிகள் உள்ளிட்டோரும் மணமக்களை வாழ்த்தினர். தகவல், #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKITWING #மத்திய_சென்னை_கிழக்கு 01.09.2021
மஜக கள்ளக்குறிச்சி மாவட்ட ஆய்வுக்குழு கூட்டம்! மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது மற்றும் தலைமை நிர்வாகிகள் பங்கேற்பு.!
செப்:02., மனிதநேய ஜனநாயக கட்சியின் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆய்வுக்குழு கூட்டம் 01.09.2021 அன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் மஜக மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது, அவர்கள் கலந்துகொண்டு மாவட்டத்தின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்து ஆலோசனைகள் வழங்கினார். அவருடன் அவைத் தலைவர் சம்சுதீன் நாசர் உமரி, மாநில துணைச் செயலாளர் நெய்வேலி இப்ராஹிம், ஆகியோர் உடனிருந்தனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKITWING #கள்ளக்குறிச்சி_மாவட்டம் 01.09.2021
மஜக விழுப்புரம் மாவட்ட ஆலோசனை கூட்டம்! மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது பங்கேற்பு!
செப்:02., மனிதநேய ஜனநாயக கட்சியின் விழுப்புரம் மாவட்ட ஆலோசனை கூட்டம் மாவட்ட செயலாளர் முஹம்மது ரிஸ்வான், அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மனிதநேய ஜனநாயக கட்சி மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது, Mcom. அவர்கள் கலந்துகொண்டு மாவட்டத்தின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்து ஆலோசனைகள் வழங்கினார். அவருடன் அவைத் தலைவர் சம்சுதீன் நாசர் உமரி, மாநில துணைச் செயலாளர் நெய்வேலி இப்ராஹிம், ஆகியோர் உடனிருந்தனர். சமீபத்தில் நடைபெற்ற நிர்வாகக் குழுவில் எடுத்த முடிவின் அடிப்படையில் நிர்வாக வசதிக்காக விழுப்புரம் மாவட்டம் இரண்டாக பிரிக்கப்பட்டது. விழுப்புரம், விக்கிரவாண்டி, செஞ்சி, ஆகிய சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கிய மாவட்டம் விழுப்புரம் தெற்கு மாவட்டம் என்றும், திண்டிவனம், மயிலம், வானூர் ஆகிய சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கிய மாவட்டம் விழுப்புரம் வடக்கு மாவட்டம் என்றும் பிரிக்கப்பட்டது. நிறைவாக மாவட்ட பொருளாளர் சவுக்கத் அலி, நன்றியுரை யாற்றினார். தகவல் #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKITWING #விழுப்புரம்_மாவட்டம் 01.09.2021