You are here

தமிழக மாணவர்களின் நலன் குறித்தான கோரிக்கை மனு! அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்களிடம் மஜக நிர்வாகிகள் நேரில் அளித்தனர்..!

செப்:02., மனிதநேய ஜனநாயக கட்சியின் கோவை மற்றும் திருச்சி மாவட்ட நிர்வாகிகள் இன்று கிரீன்வேஸ் சாலையில் உள்ள பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் இல்லத்தில் அமைச்சர் திரு. அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்களை நேரில் சந்தித்து தமிழக மாணவர்களின் நலன் குறித்தான கோரிக்கை மனுவை அளித்தனர்.

அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:

கொரோனா காரணமாக கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பள்ளிகள் திறக்கப்படாத சூழ்நிலையில் ஆன்லைன் வகுப்புகள் மூலம் பாடங்கள் நடத்தப்பட்டது. ஆன்லைன் வகுப்புகளில் பங்கேற்க முடியாதவர்கள் அடுத்த வகுப்பிற்கு தேர்ச்சி பெறமாட்டார்கள் எனவும், மேலும் பள்ளிக் கட்டணத்தை செலுத்தாதவர்களும் அதே வகுப்பில் தான் தொடர வேண்டும் என்றும் பல்வேறு பள்ளி நிர்வாகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா சூழலைக் கருத்தில் கொண்டு தமிழக அரசு ஆல் பாஸ் என அறிவித்தபோதும் தனியார் பள்ளிகளின் இது போன்ற நடவடிக்கைகள் மாணவர்களையும், பெற்றோர்களையும் வஞ்சிக்கும் விதமாக உள்ளது.

ஆகவே மாண்புமிகு அமைச்சர் அவர்கள் இவ்விசயத்தில் தலையிட்டு தீர்வு காண வேண்டும் என மனுவில் குறிப்பிடப்பட்டது. மனுவைப் பெற்றுக் கொண்ட அமைச்சர் அவர்கள் இது தொடர்பாக நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.

இந்நிகழ்வில் IKP மாநில செயலாளர் இசாக், கோவை மாநகர் மாவட்ட செயலாளர் MH.அப்பாஸ், திருச்சி மாவட்ட செயலாளர் பேரா. மைதீன், கோவை மாவட்ட பொருளாளர் TMS.அப்பாஸ், துணை செயலாளர்கள் ATR.பதுருதீன், சிங்கை சுலைமான் ஆகியோர் கலந்து கொண்டனர்.

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKitWING
#சென்னை
02.09.2021

Top