நெல்லை.பிப்.10., மனிதநேய ஜனநாயக கட்சியின் நெல்லை மாவட்டம், வீ.கே.புரம் கிளை மற்றும் ஜாமியா ஜீம்ஆ பள்ளிவாசல், நாகர்கோவில் பெஜான்சிங் கண் மருத்துவமனை இணைந்து இலவச கண் சிகிச்சை முகாம் வீ.கே.புரம் ஜாமியா பள்ளியில் இன்று நடைபெற்றது. முகாமை ஜமாத் தலைவர் M.அபுல்கலாம் ஆசாத் அவர்கள் துவக்கி வைத்தார், இம்முகாமில் நூற்றூக்கனக்கான பொதுமக்கள் கலந்துகொண்டு பயனடைந்தனர், மேலும் கண் அறுவை சிகிச்சைக்கு பரிந்துரைக்கப் பட்டவர்களுக்கு இலவச அறுவை சிகிச்சை செய்யவும் ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் பள்ளிவாசல் இமாம் A.முகம்மதுஹசன் அல் வாஹிதி மற்றும் மஜக நெல்லை மாவட்ட துணை செயலாளர் A.செய்யது அலி, அம்பை ஒன்றிய செயலாளர் M. அன்சர் பாபு,அம்பை ஒன்றிய துணை செயலாளர் A.ஜாஹிர் உசேன். சங்கரபாண்டியபுரம் நகர செயலாளர் பீர்ஷா உள்ளிட்ட நிர்வாகிகள் முகாமிற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKITWING #நெல்லை_மாவட்டம் 10-02-2021
Month:
துளசியாப்பட்டினத்தில் மஜகவில் இணைந்த புதியவர்கள்!
பிப்.08, நாகை மாவட்டம், வேதாரண்யம் வட்டம் துளசியாப்பட்டினத்தில் மனிதநேய ஜனநாயக கட்சியில் திரளானோர் தங்களை இணைத்து கொண்டனர். மனிதநேய ஜனநாயக வணிகர் சங்க (MJVS) மாவட்ட துணைச் செயலாளர் M.A.அப்துல் சலீம் மற்றும் வேதை ஒன்றிய செயலாளர் J.இப்ராகிம்ஷா ஆகியோர் இணைந்தவர்களுக்கு முதற்கட்ட மஜக அடையாள அட்டைகளை கையளித்தனர். இதில் துளசியாப்பட்டினம் கிளை செயலாளர் K.அப்துல் சுக்கூர், பொருளாளர் M.அப்துல் ஹலீம், இளைஞரணி செயலாளர் J.இம்ரான் உள்பட திரளான மஜகவினர் பங்கேற்றனர். தகவல், #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி, #MJKitWING #நாகை_மாவட்டம். 07.02.2021
மஜக கன்னியாகுமரி மாவட்ட பொதுக்குழு கூட்டம்!மாநில துணை செயலாளர் சாகுல் ஹமீது பங்கேற்பு!
பிப்.08., கன்னியாகுமரி மாவட்ட மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுக்குழு கூட்டம் 07.02.2021 அன்று மாவட்ட செயலாளர் பிஜ்ருல் ஹபீஸ், அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இதில் மாநில செயற்குழு உறுப்பினர் ரூபிக்கர் அலி, மாவட்ட துணை செயலாளர் முஜீப் ரகுமான், சாதிக் அலி, ஆகியோர் முன்னிலை வகித்தனர். மிஸ்பாஹ் ஆலிம் அவர்கள் நீதி போதனையாற்றினார். சிறப்பு அழைப்பாளராக மாநில துணைச் செயலாளர் ஏ.ஆர். சாகுல் அமீது, அவர்கள் பங்கேற்று கட்சி சார்பில் மாவட்டத்தில் நிகழ்ச்சிகள் நடத்துவது குறித்தும், கட்சி வளர்ச்சிப் பணிகள், மற்றும் நிர்வாக கட்டமைப்பு குறித்தும், நிர்வாகிகள் மத்தியில் உரையாற்றினார். இந்நிகழ்வில் மாவட்ட, மாநகர ,பகுதி , கிளை, நிர்வாகிகள் திரளானோர் பங்கேற்றனர். தகவல் #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKITWING #கன்னியாகுமரி_மாவட்டம் 07.02.2021
மஜக சேலம் மாவட்ட செயலாளர் இல்ல திருமண நிகழ்வு..!! மஜக மாநில பொருளாளர் எஸ் எஸ் ஹாரூன் ரசீது வாழ்த்து..!!
சேலம்., பிப்.7 மனிதநேய ஜனநாயக கட்சியின் சேலம் மாவட்ட செயலாளர் மஹாபூப் அலி அவர்களின் இல்ல திருமண விழா சேலத்தில் காந்தி ஸ்டேடியம் அருகில் உள்ள தமிழ் சங்கம் திருமண மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது. மணமகன் H.D.முஹம்மது ஹனிபா மற்றும் மணமகள் A.ஜெசிமா பர்ஜானா ஆகியோருக்கு நடைபெற்ற இத்திருமண நிகழ்வில் மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது மற்றும் இணைப் பொதுச்செயலாளர் ஜே.எஸ்.ரிபாயி , துணைப் பொதுச்செயலாளர் மன்னை.செல்லச்சாமி ஆகியோர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள். இந்நிகழ்வில் மாநில துணைச் செயலாளர் பாபு ஷாஹின்ஷா, மாவட்ட பொருளாளர் O.S.பாபு, மாவட்ட துணைச் செயலாளர்கள் சர்புதீன், முகமது சுஹகெய்ல், முகம்மது சபீர், கொள்கை விளக்க அணிச் செயலாளர் முகம்மது சபீர் மாவட்ட மருத்துவ சேவை அணி செயலாளர் அசன், மாவட்ட மருத்துவ சேவை அணி பொருளாளர் விக்னேஷ், மாவட்ட இளைஞரணி செயலாளர் காஜா, அஸ்தம்பட்டி பகுதி செயலாளர் அப்பாஸ், பகுதி பொருளாளர் சலீம், கொண்டலாம்பட்டி பகுதி செயலாளர் யாசின், பகுதி பொருளாளர் கார்த்தி, சுற்றுச்சூழல் அணி செயலாளர் பிலால் வர்த்தகர் அணி செயலாளர் ஹக்கீம், அம்மாபேட்டை பகுதி நிர்வாகிகள்
ஏனங்குடியில் MJTS ஆட்டோ சங்க பெயர்பலகை திறப்பு விழா! மஜக மாநில துணைச்செயலாளர் நாகை முபாரக் பங்கேற்று திறந்து வைத்தார்!!
பிப்.07, இன்று ஏனங்குடி ஆலமரத்தடியில் மனிதநேய ஜனநாயக கட்சியின் தொழிற்சங்க பிரிவான மனிதநேய ஜனநாயக தொழிற்சங்கத்தின் (MJTS) ஆட்டோ சங்க பெயர் பலகை திறப்பு விழா MJTS மாவட்ட தலைவர் ஜாஹீர் ஹீசைன் அவர்கள் தலைமையிலும் MJTS மாவட்ட நிர்வாகிகள் தமிமுன் அன்சாரி, பரிதுதீன், ஆதினங்குடி சாகுல், முத்து முகம்மது ஆகியோர் முன்னிலையிலும் நடைப்பெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக மஜக மாநில துணைச் செயலாளர் நாகை முபாரக் கலந்து கொண்டு MJTS தொழிற்சங்கத்திற்குட்பட்ட APJ அப்துல் கலாம் ஆட்டோ ஓட்டுநர்கள் மற்றும் உரிமையாளர்கள் சங்கத்தின் பெயர் பலகையை திறந்து வைத்தார். இந்நிகழ்வில் உள்ளூர் அனைத்து கட்சி பிரமுகர்கள், மஜக மாவட்ட பொருளாளர் சதக்கத்துல்லாஹ், ஒன்றிய செயலாளர் அன்வர்தீன், MJVS மாவட்ட பொருளாளர் பகுருதீன், தகவல் தொழில்நுட்ப அணியின் மாவட்ட துணை செயலாளர் நிசாத் , ஆதலையூர், ஏனங்குடி, கேதாரிமங்கலம், வவ்வாலடி, துறையூர், கோட்டூர் கிளை நிர்வாகிகள் மற்றும் ஆட்டோ சங்கத்தை சேர்ந்த உறுப்பினர்கள் திரளாகக் கலந்து கொண்டனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி, #MJKitWING #நாகை_மாவட்டம்.