திருப்பூர்.மார்ச்;04 மனிதநேய ஜனநாயக கட்சியின் திருப்பூர் மாவட்ட பொதுக்குழு கூட்டம் மாநில துணை பொதுச் செயலாளர் கோவை சுல்தான் அமீர், அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இதில் துணைப் பொதுச் செயலாளர் சையது அகமது பாருக், மாநில துணைச் செயலாளர் கோவை அப்துல் பஷீர், ஆகியோர் முன்னிலை வகித்தனர். பொறுப்புக்குழு உறுப்பினர் முஸ்தாக் அஹமது, அவர்கள் வரவேற்புரையாற்றினார், பொறுப்புக் குழு உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் அவர்கள் கட்சியின் செயல்பாடுகள் குறித்து உரையாற்றினார். நிகழ்வில் கட்சியின் வளர்ச்சி பணிகள் குறித்தும், எதிர்கால செயல் திட்டங்கள் குறித்தும், சட்டமன்ற தேர்தல் குறித்தும், நிர்வாகிகள் மத்தியில் தலைமை நிர்வாகிகள் உரையாற்றினர். கூட்டத்தின் இறுதியில் பொறுப்புக்குழு கலைக்கப்பட்டு வாக்கெடுப்பின் அடிப்படையில் புதிய மாவட்ட நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். நிகழ்வில் காங்கேயம், மங்கலம், உடுமலைப்பேட்டை, தாராபுரம், நகர நிர்வாகிகள், மற்றும் கிளை நிர்வாகிகள் திரளானோர் கலந்து கொண்டனர். தகவல் #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #திருப்பூர்_மாவட்டம் 02-03-2021
மாவட்ட பொதுக்குழு கூட்டம்
மஜக கன்னியாகுமரி மாவட்ட பொதுக்குழு கூட்டம்!மாநில துணை செயலாளர் சாகுல் ஹமீது பங்கேற்பு!
பிப்.08., கன்னியாகுமரி மாவட்ட மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுக்குழு கூட்டம் 07.02.2021 அன்று மாவட்ட செயலாளர் பிஜ்ருல் ஹபீஸ், அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இதில் மாநில செயற்குழு உறுப்பினர் ரூபிக்கர் அலி, மாவட்ட துணை செயலாளர் முஜீப் ரகுமான், சாதிக் அலி, ஆகியோர் முன்னிலை வகித்தனர். மிஸ்பாஹ் ஆலிம் அவர்கள் நீதி போதனையாற்றினார். சிறப்பு அழைப்பாளராக மாநில துணைச் செயலாளர் ஏ.ஆர். சாகுல் அமீது, அவர்கள் பங்கேற்று கட்சி சார்பில் மாவட்டத்தில் நிகழ்ச்சிகள் நடத்துவது குறித்தும், கட்சி வளர்ச்சிப் பணிகள், மற்றும் நிர்வாக கட்டமைப்பு குறித்தும், நிர்வாகிகள் மத்தியில் உரையாற்றினார். இந்நிகழ்வில் மாவட்ட, மாநகர ,பகுதி , கிளை, நிர்வாகிகள் திரளானோர் பங்கேற்றனர். தகவல் #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKITWING #கன்னியாகுமரி_மாவட்டம் 07.02.2021