மஜக சேலம் மாவட்ட செயலாளர் இல்ல திருமண நிகழ்வு..!! மஜக மாநில பொருளாளர் எஸ் எஸ் ஹாரூன் ரசீது வாழ்த்து..!!


சேலம்., பிப்.7

மனிதநேய ஜனநாயக கட்சியின் சேலம் மாவட்ட செயலாளர் மஹாபூப் அலி அவர்களின் இல்ல திருமண விழா சேலத்தில் காந்தி ஸ்டேடியம் அருகில் உள்ள தமிழ் சங்கம் திருமண மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது.

மணமகன் H.D.முஹம்மது ஹனிபா மற்றும் மணமகள் A.ஜெசிமா பர்ஜானா ஆகியோருக்கு நடைபெற்ற இத்திருமண நிகழ்வில் மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது மற்றும் இணைப் பொதுச்செயலாளர் ஜே.எஸ்.ரிபாயி , துணைப் பொதுச்செயலாளர் மன்னை.செல்லச்சாமி ஆகியோர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள்.

இந்நிகழ்வில் மாநில துணைச் செயலாளர் பாபு ஷாஹின்ஷா, மாவட்ட பொருளாளர் O.S.பாபு, மாவட்ட துணைச் செயலாளர்கள் சர்புதீன், முகமது சுஹகெய்ல், முகம்மது சபீர், கொள்கை விளக்க அணிச் செயலாளர் முகம்மது சபீர் மாவட்ட மருத்துவ சேவை அணி செயலாளர் அசன், மாவட்ட மருத்துவ சேவை அணி பொருளாளர் விக்னேஷ், மாவட்ட இளைஞரணி செயலாளர் காஜா, அஸ்தம்பட்டி பகுதி செயலாளர் அப்பாஸ், பகுதி பொருளாளர் சலீம், கொண்டலாம்பட்டி பகுதி செயலாளர் யாசின், பகுதி பொருளாளர் கார்த்தி, சுற்றுச்சூழல் அணி செயலாளர் பிலால் வர்த்தகர் அணி செயலாளர் ஹக்கீம், அம்மாபேட்டை பகுதி நிர்வாகிகள் நவீத் , இப்ராஹிம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

தகவல்
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#சேலம்_மாவட்டம்
07.02.2021