பிப்.08.,
கன்னியாகுமரி மாவட்ட மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுக்குழு கூட்டம் 07.02.2021 அன்று மாவட்ட செயலாளர்
பிஜ்ருல் ஹபீஸ், அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
இதில் மாநில செயற்குழு உறுப்பினர் ரூபிக்கர் அலி, மாவட்ட துணை செயலாளர் முஜீப் ரகுமான், சாதிக் அலி, ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மிஸ்பாஹ் ஆலிம் அவர்கள் நீதி போதனையாற்றினார்.
சிறப்பு அழைப்பாளராக மாநில துணைச் செயலாளர் ஏ.ஆர். சாகுல் அமீது, அவர்கள் பங்கேற்று கட்சி சார்பில் மாவட்டத்தில் நிகழ்ச்சிகள் நடத்துவது குறித்தும், கட்சி வளர்ச்சிப் பணிகள், மற்றும் நிர்வாக கட்டமைப்பு குறித்தும், நிர்வாகிகள் மத்தியில் உரையாற்றினார்.
இந்நிகழ்வில் மாவட்ட, மாநகர ,பகுதி , கிளை, நிர்வாகிகள் திரளானோர் பங்கேற்றனர்.
தகவல்
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKITWING
#கன்னியாகுமரி_மாவட்டம்
07.02.2021