திருப்பூர்: ஜன.07 திருப்பூர் மாவட்ட மனிதநேய ஜனநாயக கட்சியின் செயற்குழு கூட்டம் 01.01.2021 அன்று மாவட்ட பொருளாளர் முஸ்தாக் அகமது, அவர்கள் தலைமையில் மாவட்ட நிர்வாகிகள் முன்னிலையில் நடைபெற்றது. இதில் மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது, அவர்கள் பங்கேற்றார். அவருடன் துணை பொதுச் செயலாளர்கள் சையது அஹமது பாரூக், கோவை சுல்தான் அமீர், ஆகியோர் பங்கேற்றனர். கூட்டத்தில் திருப்பூர் மாவட்ட முன்னாள் செயலாளர் ஹைதர் அலி,அவர்கள் மீது ஒரு வழக்கு தொடர்பாக கட்சி தலைமை நடவடிக்கை எடுத்துள்ளது. ஆனால் அதை காரணமாக வைத்து திருப்பூர் காவல்துறை அவர் மீது தொடர்ந்து பொய் வழக்குகளை பதிவு செய்ய முயற்சிக்கும் காவல் துறையைக் கண்டித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் இது தொடர்பாக காவல்துறை உயர் அதிகாரிகளை சந்தித்து முறையிடுவது என முடிவு செய்யப்பட்டது. மேலும் மாவட்ட நிர்வாகம் கலைக்கப்பட்டு பொறுப்புக் குழு அமைக்கப்பட்டு பொறுப்புக்குழு நிர்வாகிகளாக முஸ்தாக் அகமது, இக்பால், முஜிபூர் ரகுமான், ராயல் பாஷா, கண்ணன், பாபு, மஜீத், ஆகியோரை நியமனம் செய்ய தலைமைக்கு பரிந்துரைப்பதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இக்கூட்டத்தில் தலைமை செயற்குழு உறுப்பினர் இக்பால், மாவட்ட துணைச் செயலாளர் ஈஸ்வரன், மாவட்ட வர்த்தக அணி செயலாளர்
Month:
TNTJவுக்கு மஜக துணை நிற்கும்.! மஜக பொதுச்செயலாளர் மு தமிமுன் அன்சாரி MLA பேட்டி.!!
l சென்னை.ஜனவரி 06, TNTJ தலைமையகத்தை உரிய அணுகுமுறையின்றி சீலிட வந்த மத்திய அரசின் அதிகாரிகளின் நடவடிக்கை கடும் கண்டனத்திற்குள்ளாகியுள்ளது. சம்பவம் நடைபெற்ற அங்கு மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA அவர்கள், பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூண் ரசீது, து.பொ.செ. தைமிய்யா ஆகியோருடன் சென்றார். அங்கு பத்திரிக்கையாளர்களை சந்தித்தவர் மழை வெள்ளம் போன்ற பேரிடர்களின் போது உணவு, மருந்து என வினியோகித்து மிகப் பெரிய சமூக சேவையாற்றும் ஒரு அமைப்பை மத்திய அரசு சீண்டுவதாக குற்றம் சாட்டினார். TNTJ இதற்கு எதிராக சட்டப்பூர்வமாக எடுக்கும் நடவடிக்கைகளுக்கு மஜக துணை நிற்கும் என்றும் கூறினார். அதன் பிறகு TNTJ தலைவர் சம்சுல் லுஹா உள்ளிட்டோரை சந்தித்து பேசிவிட்டு அங்கிருந்து அனைவரும் புறப்பட்டனர். நிகழ்வின் போது மத்திய சென்னை கிழக்கு மாவட்ட மஜக செயலாளர் பிஸ்மில்லா கான் தலைமையில் துறைமுகம் பகுதியை சேர்ந்த திரளான மஜகவினரும் அங்கு திரண்டு வந்திருந்தனர். தகவல், #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKitWING #MJK2021 #மத்தியசென்னை_கிழக்கு_மாவட்டம் 06-01-2021
ஜனவரி 21 தஞ்சையில் பச்சைக் கொடி பேரணி! காவிரி உரிமை மீட்புக்குழு அறிவிப்பு!
ஜனவரி 5 இன்று காவிரி உரிமை மீட்பு குழு சார்பில் திருவாரூரில் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது. இதில் அதன் ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன், மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA,, விவசாய சங்க கூட்டியக்க ஒருங்கிணைப்பாளர் காவிரி தனபாலன், விடுதலை தமிழ் புலிகள் கட்சி தலைவர் குடந்தை அரசன்,தமிழ் தேசிய இயக்க தலைவர் மருத்துவர் பாரதி மோகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பல விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகளும் வருகை தந்திருந்தனர். இதில் டெல்லியில் போராடும் விவசாயிகளை ஆதரித்தும், மத்திய அரசின் உழவர் ஒழிப்பு சட்டங்களை ரத்து செய்யக் கோரியும் எதிர்வரும் ஜனவரி 21 வியாழன் அன்று காலை தஞ்சாவூரில் பிரம்மாண்ட பச்சை கொடி பேரணி நடத்துவது என்று முடிவானது. அதற்கு முன்பாக டெல்டா மாவட்டங்களில் இந்த சட்டங்களின் பாதகங்களை விளக்கி துண்டு பிரசுர பரப்புரை நடத்துவது என்றும் முடிவானது. போராட்டத்தில் பங்கேற்க முடியாதவர்களும், போராட்ட ஆதரவாளர்களும், வெளி மாநிலங்களில் வாழும் தமிழர்களும்,வெளிநாடு வாழ் தமிழர்களும் அன்று காலை சமூக இணையதள வழியான போராட்டங்களில் பங்கேற்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுக்கப்பட்டது. இந்நிகழ்வில் பொதுச் செயலாளர் அவர்களோடு மஜக மாநிலச் செயலாளர் நாச்சிக்குளம் தாஜ்தீன், மாநில விவசாய அணி செயலாளர்
சிறைவாசிகளின் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அமைச்சர் SP வேலுமணி அவர்களுடன் மஜக துணை பொதுச்செயலாளர் சுல்தான் அமீர் சந்திப்பு!!
ஜன.05., கோவையில் இன்று மனிதநேய ஜனநாயக கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் கோவை சுல்தான் அமீர், அவர்களுடைய தலைமையில் மஜக நிர்வாகிகள் உள்ளாட்சித் துறை அமைச்சர் SP.வேலுமணி, அவர்களை சந்தித்தனர். இச்சந்திப்பில் தமிழக சிறைகளில் உள்ள 22 ஆண்டுகளை கடந்த ஆயுள் தண்டனை சிறைவாசிகளை ஜாதி, மத பேதமின்றி, விடுதலை செய்யக்கோரியும், உயர்நீதிமன்றம் உத்தரவிட்டும் விடுதலை செய்யப்படாத சிறைவாசிகளை உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளையும், அவர்களின் நிலையை பற்றியும், அமைச்சரிடத்தில் துணை பொதுச்செயலாளர் எடுத்துரைத்தார். இது தொடர்பான முழு கோரிக்கையையும் கேட்ட அமைச்சர் அவர்கள் இதை முதலமைச்சர் அவர்களின் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை மேற்கொள்வதாக மஜக நிர்வாகிகளிடத்தில் தெரிவித்தார். இச்சந்திப்பின் போது மாவட்ட செயலாளர் MH.அப்பாஸ், மாவட்ட பொருளாளர் TMS.அப்பாஸ், மாவட்ட துணைச் செயலாளர் ATR.பதுருதீன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் அமீர் அப்பாஸ், சிறைவாசிகள் நல ஒருங்கிணைப்பாளர் அப்துல் பாசித், மற்றும் சிறைவாசிகள் குடும்பத்தார்கள் உடன் இருந்தனர். மிகவும் குறுகிய நேரத்தில் உள்ளாட்சித் துறை அமைச்சர் SP.வேலுமணி, அவர்கள் சபரிமலை செல்லும் நேரத்தில் சந்திக்க அனுமதி கொடுத்ததும், சந்திக்க வருகை தந்த அனைவருக்கும் உணவு ஏற்பாடு செய்து உணவு அருந்தி விட்டு
பாபநாசத்தில் விவசாயிகளுக்கு ஆதரவாக மஜக கண்டன ஆர்ப்பாட்டம்!
ஜன.05, மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் கார்ப்பரேட் கம்பெனிகளிடம் விவசாயிகளை அடிமைப்படுத்தும் வேளாண் கறுப்பு சட்டங்களுக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம் பாபநாசம் மேலவீதி அண்ணாசிலை அருகில் ஒன்றிய செயலாளர் அஷ்ரப் அலி தலைமையில் நடைப்பெற்றது. இப்போராட்டத்தில் மாநில கொள்கை விளக்க அணியின் துணைச் செயலாளர் காதர் பாட்சா, மாநில மருத்துவ சேவை அணி துணை செயலாளர் முஹம்மது மஃரூப், இந்திய கம்யூனிஸ்ட் தில்லைவனம், MJVS மாநில செயலாளர் யூசுப் ராஜா ஆகியோர் வேளாண் சட்டங்களை கண்டித்து பேசினர். இதில் மாவட்ட செயலாளர் ஹ.சேக் முஹம்மது அப்துல்லாஹ், பொருளாளர் குடந்தை நிஜாம், தலைமை செயற்குழு உறுப்பினர் இக்பால் சேட், மாவட்ட துணைச் செயலாளர்கள் முஹம்மது இப்ராஹிம், இப்ராஹிம் ஷா, மருத்துவ சேவை அணி செயலாளர் முஹம்மது அலி, அய்யம்பேட்டை நகர செயலாளர் சேக் ஆகியோர் முன்னிலை வகிக்க ஒன்றிய, நகர, கிளை நிர்வாகிகளும், உறுப்பினர்களும், தோழமை கட்சியினரும் திரளாக கலந்து கொண்டனர். தகவல் ; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி, #MJKitWING #தஞ்சை_வடக்கு_மாவட்டம். 04.01.2021