l
சென்னை.ஜனவரி 06,
TNTJ தலைமையகத்தை உரிய அணுகுமுறையின்றி சீலிட வந்த மத்திய அரசின் அதிகாரிகளின் நடவடிக்கை கடும் கண்டனத்திற்குள்ளாகியுள்ளது.
சம்பவம் நடைபெற்ற அங்கு மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA அவர்கள், பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூண் ரசீது, து.பொ.செ. தைமிய்யா ஆகியோருடன் சென்றார்.
அங்கு பத்திரிக்கையாளர்களை சந்தித்தவர் மழை வெள்ளம் போன்ற பேரிடர்களின் போது உணவு, மருந்து என வினியோகித்து மிகப் பெரிய சமூக சேவையாற்றும் ஒரு அமைப்பை மத்திய அரசு சீண்டுவதாக குற்றம் சாட்டினார்.
TNTJ இதற்கு எதிராக சட்டப்பூர்வமாக எடுக்கும் நடவடிக்கைகளுக்கு மஜக துணை நிற்கும் என்றும் கூறினார்.
அதன் பிறகு TNTJ தலைவர் சம்சுல் லுஹா உள்ளிட்டோரை சந்தித்து பேசிவிட்டு அங்கிருந்து அனைவரும் புறப்பட்டனர்.
நிகழ்வின் போது மத்திய சென்னை கிழக்கு மாவட்ட மஜக செயலாளர் பிஸ்மில்லா கான் தலைமையில் துறைமுகம் பகுதியை சேர்ந்த திரளான மஜகவினரும் அங்கு திரண்டு வந்திருந்தனர்.
தகவல்,
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKitWING
#MJK2021
#மத்தியசென்னை_கிழக்கு_மாவட்டம்
06-01-2021