You are here

ஜனவரி 21 தஞ்சையில் பச்சைக் கொடி பேரணி! காவிரி உரிமை மீட்புக்குழு அறிவிப்பு!


ஜனவரி 5

இன்று காவிரி உரிமை மீட்பு குழு சார்பில் திருவாரூரில் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது.

இதில் அதன் ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன், மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA,, விவசாய சங்க கூட்டியக்க ஒருங்கிணைப்பாளர் காவிரி தனபாலன், விடுதலை தமிழ் புலிகள் கட்சி தலைவர் குடந்தை அரசன்,தமிழ் தேசிய இயக்க தலைவர் மருத்துவர் பாரதி மோகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பல விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகளும் வருகை தந்திருந்தனர்.

இதில் டெல்லியில் போராடும் விவசாயிகளை ஆதரித்தும், மத்திய அரசின் உழவர் ஒழிப்பு சட்டங்களை ரத்து செய்யக் கோரியும் எதிர்வரும் ஜனவரி 21 வியாழன் அன்று காலை தஞ்சாவூரில் பிரம்மாண்ட பச்சை கொடி பேரணி நடத்துவது என்று முடிவானது.

அதற்கு முன்பாக டெல்டா மாவட்டங்களில் இந்த சட்டங்களின் பாதகங்களை விளக்கி துண்டு பிரசுர பரப்புரை நடத்துவது என்றும் முடிவானது.

போராட்டத்தில் பங்கேற்க முடியாதவர்களும், போராட்ட ஆதரவாளர்களும், வெளி மாநிலங்களில் வாழும் தமிழர்களும்,வெளிநாடு வாழ் தமிழர்களும் அன்று காலை சமூக இணையதள வழியான போராட்டங்களில் பங்கேற்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

இந்நிகழ்வில் பொதுச் செயலாளர் அவர்களோடு மஜக மாநிலச் செயலாளர் நாச்சிக்குளம் தாஜ்தீன், மாநில விவசாய அணி செயலாளர் அப்துல் சலாம், திருவாரூர் மாவட்ட பொருளாளர் ஷேக் அப்துல்லா, தலைமை செயற்குழு உறுப்பினர் பொதக்குடி ஜெய்னுதீன், மாவட்ட விவசாய அணி செயலாளர் எரவாஞ்சேரி நஜ்முதீன் ஆகியோரும் பங்கேற்றனர்.

தகவல்,

#மஜக_தகவல்_தொழிலநுட்ப_அணி,
#MJKITWING
#திருவாரூர்_மாவட்டம்
05.01.2021

Top