சிறைவாசிகளின் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அமைச்சர் SP வேலுமணி அவர்களுடன் மஜக துணை பொதுச்செயலாளர் சுல்தான் அமீர் சந்திப்பு!!


ஜன.05.,

கோவையில் இன்று மனிதநேய ஜனநாயக கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் கோவை சுல்தான் அமீர், அவர்களுடைய தலைமையில் மஜக நிர்வாகிகள் உள்ளாட்சித் துறை அமைச்சர் SP.வேலுமணி, அவர்களை சந்தித்தனர்.

இச்சந்திப்பில் தமிழக சிறைகளில் உள்ள 22 ஆண்டுகளை கடந்த ஆயுள் தண்டனை சிறைவாசிகளை ஜாதி, மத பேதமின்றி, விடுதலை செய்யக்கோரியும், உயர்நீதிமன்றம் உத்தரவிட்டும் விடுதலை செய்யப்படாத சிறைவாசிகளை உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளையும், அவர்களின் நிலையை பற்றியும், அமைச்சரிடத்தில் துணை பொதுச்செயலாளர் எடுத்துரைத்தார்.

இது தொடர்பான முழு கோரிக்கையையும் கேட்ட அமைச்சர் அவர்கள் இதை முதலமைச்சர் அவர்களின் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை மேற்கொள்வதாக மஜக நிர்வாகிகளிடத்தில் தெரிவித்தார்.

இச்சந்திப்பின் போது மாவட்ட செயலாளர் MH.அப்பாஸ், மாவட்ட பொருளாளர் TMS.அப்பாஸ், மாவட்ட துணைச் செயலாளர் ATR.பதுருதீன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் அமீர் அப்பாஸ், சிறைவாசிகள் நல ஒருங்கிணைப்பாளர் அப்துல் பாசித், மற்றும் சிறைவாசிகள் குடும்பத்தார்கள் உடன் இருந்தனர்.

மிகவும் குறுகிய நேரத்தில் உள்ளாட்சித் துறை அமைச்சர் SP.வேலுமணி, அவர்கள் சபரிமலை செல்லும் நேரத்தில் சந்திக்க அனுமதி கொடுத்ததும், சந்திக்க வருகை தந்த அனைவருக்கும் உணவு ஏற்பாடு செய்து உணவு அருந்தி விட்டு தான் செல்ல வேண்டும் என்று அமைச்சர் அவர்கள் அன்பார்ந்த கோரிக்கை வைத்தது குறிப்பிடத்தக்கது.

தகவல்
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKITWING
#கோவை_மாநகர்_மாவட்டம்
05.01.2021