ஜன.11., மனிதநேய ஜனநாயக கட்சி தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் நகர மருத்துவ சேவை அணியின் சார்பில் தொடர்ந்து இரத்ததானம் மருத்துவ உதவி மற்றும் கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகள் ஆகிய பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகிறது. மஜக வின் இந்த சேவைகளை பாராட்டி சங்கரன் கோவில் APJ.அப்துல்கலாம், ட்ரஸ்ட் சார்பில் சிறப்பு செய்யப்பட்டு சங்கரன் கோவில் அரசு மருத்துவர் அன்னராஜ், அவர்கள் மஜக நிர்வாகிகளுக்கு விருது வழங்கி கெளரவித்தார். இதில் மனித உரிமை அணி மாவட்ட செயலாளர் சங்கை பீர் மைதீன், மற்றும் சங்கரன் கோவில் நகர துணைச் செயலாளர் மாலிக், ஆகியோர் விருதைப் பெற்றனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி, #MJKITWING #தென்காசி_மாவட்டம் 10.01.2021
Month:
64 விவசாயிகள் உயிர் துறந்திருப்பது தேசத்திற்காகவே! பொதக்குடியில் மஜக பொதுச்செயலாளர் மு தமிமுன் அன்சாரி MLA பேட்டி!
ஜன.11, திருவாரூர் மாவட்டம் பொதக்குடி, அத்திக்கடை, திருவாரூர், கூத்தாநல்லூர் ஆகிய இடங்களில் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்க மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA., வருகை தந்தார். பொதக்குடியில் நடைப்பெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பில் அவர் கூறியதாவது... நாட்டுக்காக எல்லையில் போராடி உயிர்நீக்கும் ராணுவ வீரர்களின் தியாகங்களை போற்றுகிறோம். துடிக்கிறோம். அவர்கள் நம்மை எதிரி நாடுகளிடமிருந்து பாதுகாக்க உயிர் துறக்கிறார்கள். அதுபோலவே, நாம் வாழ வேண்டும் என்பதற்காக உழைப்பவர்கள் விவசாயிகள். அவர்கள் மத்திய அரசின் சர்ச்சைக்குரிய 3 வேளாண் சட்டங்களை எதிர்த்து கொடும் பணியிலும், மழையிலும் போராடுகிறார்கள். 46 நாட்களில் 64 விவசாயிகள் போராடி உயிர் தியாகம் செய்திருக்கிறார்கள். நமக்காக, நாட்டுக்காக அவர்கள் தியாகிகளாக இருக்கிறார்கள். பிரதமர் மோடி சர்வாதிகாரமாக இப்பிரச்சனையை அணுகாமல் மனிதாபிமானத்தோடு அணுக வேண்டும். விவசாயிகளின் உயிர் தியாகங்களை, போராடும் உறுதியை உலகமே பார்த்து வியக்கிறது. இவ்வாறு அவர் கூறினார். அரசியல் நிலைபாடுகள் குறித்த கேள்விகளுக்கு ஜனவரி 23 அன்று நெல்லை தலைமை செயற்குழுவில் முடிவு செய்யப்படும் என்றார். முன்னதாக பொதக்குடியில் கட்சிக் கொடியை ஏற்றி வைத்தார். அப்போது ஏராளமான புதியவர்கள் தங்களை மஜகவில் இணைத்துக் கொண்டனர். இந்நிகழ்வில், மாவட்ட செயலாளர் சீனி ஜெகபர் சாதிக், தலைமை செயற்குழு உறுப்பினர்
புளியங்குடியில மஜக சார்பில் கண்சிகிச்சை முகாம்!!
ஜன:11., தென்காசி மாவட்டம் புளியங்குடி நகர மனிதநேய ஜனநாயக கட்சி மற்றும் நாகர் கோவில் பெஜான்சிங் கண் மருத்துவமனை &புளியங்குடி முஹைதீன் ஆண்டவர் ஜமாத் கமிட்டி இணைந்து நடத்தும் மாபெரும் கண்சிகிச்சை முகாம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு நகர செயலாளர் பாதுஷா அவர்கள் தலைமை தாங்கினார். இதில் சிறப்பு அழைப்பாளராக மாவட்டச் செயலாளர் அச்சம்புதூர் M. பீர் மைதீன், மாவட்ட துணைச் செயலாளர் வாவை இனை யத்துல்லா, ஆகியோர் கலந்து கொண்டு முகாமை தொடங்கி வைத்தனர். இம்முகாமில் 200க்கும் மேற்பட்ட நபர்கள் கலந்து கொண்டு சிகிச்சை பெற்றனர் இதில் 20 நபர்களுக்கு மேல் சிகிச்சை அளிப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் நகர பொருளாளர் சதாம் உசேன், நகர துணை நிர்வாகிகள் மகபூப் சுபஹானி, அப்துல் காதர், செய்யது அலி, பாதுஷா சுபஹானி, மற்றும் நகர நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் ஜமாத் நிர்வாகிகள், ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி, #MJK_IT_WING #தென்காசி_மாவட்டம் 10.01.2021
டெல்டா விவசாயிகள் நீதி கேட்டு நெடும் பயணம்! மஜக பொதுச்செயலாளர் மு தமிமுன் அன்சாரி MLA பங்கேற்பு…!
ஜன.10, மத்திய அரசின் சர்ச்சைக்குரிய 3 வேளாண் சட்டங்களையும் ரத்து செய்யக்கோரி தமிழக காவிரி விவசாயிகள் சங்கம் சார்பில் பொதுச்செயலாளர் P.R பாண்டியன் தலைமையில் விவசாயிகள் நீதிகேட்டு நெடும்பயணத்தை நடத்தி வருகின்றனர். டெல்டா மாவட்டங்களில் நடைபெற்று வரும் பரப்பான இந்நிகழ்வில் இன்று திருவாரூரில் மஜக பொதுச்செயலாளர் மு. தமிமுன் அன்சாரி MLA., அவர்கள் பங்கேற்று பேசினார். அதிலிருந்து முக்கிய பகுதிகள் பின்வருமாறு... புறாவுக்காக தன் தொடை சதையை அறுத்துக் கொடுத்து நீதியை நிலைநாட்டிய சோழமன்னர் சிபி ஆண்ட திருவாரூரில் இன்று மத்திய அரசிடம் நீதி கேட்டு நிற்கிறோம். விவசாயிகளை அலட்சியப் படுத்துபவர்கள் நம் நாட்டில் வென்றதில்லை என்பது வரலாறு. இன்று நம் விவசாயிகள் டெல்லியில் போராடுவதை நாடே உற்று கவனிக்கிறது. உலகப் பத்திரிகைகள் முதல் பக்க செய்திகளாக வெளியிட்டு வருகின்றன. ஐ.நா சபையின் பொதுச்செயலாளர் அவர்கள் நம் விவசாயிகளின் போராட்டத்தை ஆதரித்திரிக்கிறார் . இந்தியா ஐ.நா.வில் ஒரு அங்கம் என்பதை மறந்து விடக்கூடாது. நாம் வழியெங்கும் நகரில் நடந்து வந்தோம். வீதிகளில், கடைகளில் நின்றவர்கள், கட்டிடங்களில் நின்றவர்கள், வாகனங்களில் பயணித்தவர்கள் என பல்லாயிரக்கணக்கானோர் இரக்கம் சொட்ட நம் கோரிக்கையை கவனிப்பதை உணரமுடிந்தது. தகவல் தொழில்நுட்பத் துறையில் பணியாற்றும் இளைஞர்கள்
டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக திருச்சி மஜகவினர் ஆர்ப்பாட்டம்!
ஜன.10, மத்திய அரசு கொண்டு வந்துள்ள விவசாயிகளுக்கு எதிரான வேளாண் விவசாய சட்டங்களை ரத்து செய்யக்கோரியும், டெல்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும் மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் அரசமரம் பேருந்து நிலையம் அருகில் நடைபெற்றது. பகுதி பொறுப்பாளர் சையது முஸ்தபா தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட பொறுப்புக் குழு தலைவர் பேரா.மைதீன் அப்துல் காதர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார். தலைமைச் செயற்குழு உறுப்பினர் இப்ராஹிம் ஷா கண்டன முழக்கங்களை எழுப்பினார். ஜனநாயக சமூக நலக் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் சம்சுதீன் சட்டத்தை கண்டித்து பேசினார். இந்நிகழ்வில், மஜக நிர்வாகிகள் முகமது பீர்ஷா, அந்தோணிராஜ், சேக் அப்துல்லா, கமால், ஆரிப், முபாரக், ஷேக் மைதீன், சையது முகம்மது, அன்வர், வாகித், ஜாகீர், ஜோயல் உள்பட மஜகவினர் திரளாக கலந்து கொண்டனர். தகவல், #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி, #MJKitWING #திருச்சி_மாவட்டம்.