ஜனவரி 20, இன்று நாகை தொகுதி திருமருகலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ( CPI) தலைமையில் விவசாய சங்கங்கள் மறியல் போராட்டம் நடத்தினர். விவசாய கடன்களை ரத்து செய்ய வேண்டும், மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாய கோரிக்கைகளை முன்னிறுத்தப்பட்டது. நாகை தொகுதியில் கொட்டாரக்குடி, , திருச் செட்டாங்குடி, வடகரை , பாக்கம் கோட்டூர் ஆகிய கிராமங்களில் மழையில் மூழ்கிய பயிர்களை பார்வையிட வந்த மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA, அவர்கள், மறியலில் ஈடுபட்டு கைதாகியிருந்தோர் தங்கியிருந்த மண்டபத்திற்கு வருகை தந்தார். அவரை CPI திருமருகல் ஒன்றிய செயலாளர் தோழர் பாபுஜி வரவேற்றார். அங்கு விவசாயிகளின் கோரிக்கையை ஆதரித்து பேசினார். இந்நிகழ்வில் மஜக மாவட்ட செயலாளர் திட்டச்சேரி ரியாஸ், மாவட்ட துணை செயலாளர் முன்சி.யூசுப், ஒன்றிய செயலாளர் அன்வர், MJTS மாவட்ட துணை செயலாளர் சாகுல், IT wing மாவட்ட துணை செயலாளர் நிசாத், ஒன்றிய துணை செயலாளர் பாவா, மாலிக் ஆகியோர் உடனிருந்தனர். தகவல், #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி, #MJKITWING #நாகை_மாவட்டம் 20.01.2021
Month:
அல் ஷிபா கிளினிக் திறப்பு விழா.! மஜக பொதுச்செயலாளர் மு தமிமுன் அன்சாரி MLA திறந்து வைத்தார்!
சென்னை.ஜனவரி.19., உடல் ஆரோக்கிய சிசிச்சைகளில் ஒன்றாக அசுத்த இரத்தங்களை வெளியேற்றும் இரத்தம் குத்தி எடுத்தல் கிசிச்சை முறை தற்போது உலகெங்கும் பரவி வருகிறது. சென்னையில் இத்துறை வல்லுனர்களான டாக்டர் பெனாசிர் அவரது கணவர் டாக்டர் அஸ்லம் கான் ஆகியோர் இச் சிகிச்சையை உலக தரத்தில் வழங்கி வருகின்றனர். இன்று சென்னை நந்தனம் டெம்பிள் டவரில் அவர்களின் புதிய அல் ஷிபா கப்பிங் கிளினிக்கை மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA திறந்து வைத்தார். தமிழகத்தில் முதல்முறையாக ஜப்பானிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட கருவிகளுடன் கூடிய நவீன கிசிச்சை அறைகளையும் பார்வையிட்டார். இந்நிகழ்வில் மஜக தென் சென்னை கிழக்கு மாவட்ட செயலாளர் கையூம், மத்திய சென்னை கிழக்கு மாவட்ட செயலாளர் பிஸ்மில்லா கான், மாணவர் இந்தியா மாநில பொருளாளர் பஷீர், தலைமை செயற்குழு உறுப்பினர் ஜெய்னுதீன் உள்ளிட்ட மஜக நிர்வாகிகளும் பங்கேற்றனர். தகவல், #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKitWING #MJK2021 #தென்சென்னை_கிழக்கு_மாவட்டம் 19-01-2021
மழையால் விவசாய பயிர்கள் பாதிப்பு! கஹன் தீப் சிங் பேடியுடன் மு தமிமுன் அன்சாரி MLA சந்திப்பு!
ஜனவரி:19., டெல்டா மாவட்டங்கள் உட்பட பல மாவட்டங்களில் ஜனவரி மாத திடிர் தொடர் மழையால் 5 லட்சம் ஏக்கர் விளை நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளது. நாகை தொகுதியின் பாதிப்புகளை பத்திரிக்கை செய்திகளுடன் சேகரித்து நாகை சட்டமன்ற தொகுதி உறுப்பினர் மு.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் இன்று தலைமைச் செயலகம் வருகை தந்தார். அங்கு வேளாண்மை துறையின் ஆணையர் மற்றும் முதன்மை செயலாளர் திரு. கஹன் தீப் சிங் பேடி, IAS அவர்களை சந்தித்து கோரிக்கை மனு அளித்தார். நீங்கள் பாதிப்புக்குள்ளான பகுதிகளை பார்வையிட்ட படங்கள் தனக்கு வந்ததாக அவர் MLA அவர்களிடம் தெரிவித்தார். தமிழக அரசு இன்சூரன்ஸ் நிறுவனங்களிடம் முழு இழப்பீடை பெற்று தர வேண்டும் என்றும், இது தவிர அரசு சார்பில் ஒரு ஏக்கருக்கு 30 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் இதற்கு தாங்கள் ஆவணம் செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார். தனது கள ஆய்வின் போது விவசாயிகளும், விவசாய தொழிலாளர்களும் தன்னிடம் கூறிய விபரங்களையும் MLA அவர்கள் அவரிடம் எடுத்து கூறினார். தான் விவசாயிகளின் பக்கம் இருந்து இதில் பேசி, உரிய நடவடிக்கைகள் எடுக்க அரசுக்கு பரிந்துரைப்பதாகவும் அவர் கூறினார். தமிழகம்
புற்றுநோய் ஒழிப்பு போராளி மருத்துவர் சாந்தா அம்மையார் மரணம்.! மஜக பொதுச்செயலாளர் மு தமிமுன் அன்சாரி MLA இரங்கல்!
ஜனவரி 19, சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவ ஆராய்ச்சி கழகத்தில் கடந்த 65 ஆண்டு காலமாக மருத்துவ அறத்துடன் தன்னலமின்றி சேவையாற்றி வந்த மருத்துவர் சாந்தா அம்மையார் அவர்கள் இறந்த செய்தி அறிந்த ஆழ்ந்த வருத்தமடைந்தோம். நம்பி வரும் புற்றுநோயாளிகளுக்கு கடமையும், மனிதாபிமானமும் பொங்க அவர் வழங்கிய கிசிச்சைகள் மிக சிறப்பானவை. புற்றுநோயால் பாதிக்கப்பட்ட எளிய மக்களின் தாயாக அவர் கொண்டாடப்பட்டார். பத்மஸ்ரீ, பத்மபூஷன் போன்ற உயரிய விருதுகளை பெற்ற அவர், தனக்கு கிடைத்த வருவாயை தான் பணியாற்றிய நிறுவனத்திற்கே வழங்கிய மாமணி ஆவார். புற்றுநோய் ஒழிப்பு போராளியாக செயல்பட்டு பல ஆயிரம் உயிர்களை காப்பாற்றிய அவரது மரணம் அனைவரையும் வாட்டுகிறது. அவரை இழந்து வாடும் சக மருத்துவர்கள், குடும்பத்தினர், பணியாளர்கள், அவரால் குணமடைந்தவர்கள் என அனைவரின் துயரத்திலும் மனிதநேய ஜனநாயக கட்சி பங்கேற்கிறது. அனைவருடன் ஆறுதலையும் பகிர்ந்துக் கொள்கிறது. இவண், மு.தமிமுன் அன்சாரி MLA, #பொதுச்செயலாளர், #மனிதநேய_ஜனநாயக_கட்சி 19.01.2021
மஜக தலைமையக நியமன அறிவிப்பு.! தலைமை செயற்குழு உறுப்பினர்
மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைமை செயற்குழு உறுப்பினராக, சிந்தா மதார் த/பெ; சதக் அப்துல்லா நம்பர்.2 ராஜா நகர், ரெட்டியார்பட்டி சாலை மேலப்பாளையம், திருநெல்வேலி, அலைபேசி ; +919380907635 நியமனம் செய்யப்படுகிறார், மனிதநேய சொந்தங்கள் இவருக்கு நிர்வாக ரீதியாக முழு ஒத்துழைப்பு நல்கிட கேட்டுக்கொள்கிறேன். இவண்; மு.தமிமுன் அன்சாரி MLA., #பொதுச்செயலாளர் #மனிதநேய_ஜனநாயக_கட்சி 18-01-2021