ஜனவரி 20,
இன்று நாகை தொகுதி திருமருகலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ( CPI) தலைமையில் விவசாய சங்கங்கள் மறியல் போராட்டம் நடத்தினர்.
விவசாய கடன்களை ரத்து செய்ய வேண்டும், மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாய கோரிக்கைகளை முன்னிறுத்தப்பட்டது.
நாகை தொகுதியில் கொட்டாரக்குடி, , திருச் செட்டாங்குடி, வடகரை , பாக்கம் கோட்டூர் ஆகிய கிராமங்களில் மழையில் மூழ்கிய பயிர்களை பார்வையிட வந்த மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA, அவர்கள், மறியலில் ஈடுபட்டு கைதாகியிருந்தோர் தங்கியிருந்த மண்டபத்திற்கு வருகை தந்தார்.
அவரை CPI திருமருகல் ஒன்றிய செயலாளர் தோழர் பாபுஜி வரவேற்றார்.
அங்கு விவசாயிகளின் கோரிக்கையை ஆதரித்து பேசினார்.
இந்நிகழ்வில் மஜக மாவட்ட செயலாளர் திட்டச்சேரி ரியாஸ், மாவட்ட துணை செயலாளர் முன்சி.யூசுப், ஒன்றிய செயலாளர் அன்வர், MJTS மாவட்ட துணை செயலாளர் சாகுல், IT wing மாவட்ட துணை செயலாளர் நிசாத், ஒன்றிய துணை செயலாளர் பாவா, மாலிக் ஆகியோர் உடனிருந்தனர்.
தகவல்,
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி,
#MJKITWING
#நாகை_மாவட்டம்
20.01.2021