You are here

அல் ஷிபா கிளினிக் திறப்பு விழா.! மஜக பொதுச்செயலாளர் மு தமிமுன் அன்சாரி MLA திறந்து வைத்தார்!


சென்னை.ஜனவரி.19.,

உடல் ஆரோக்கிய சிசிச்சைகளில் ஒன்றாக அசுத்த இரத்தங்களை வெளியேற்றும் இரத்தம் குத்தி எடுத்தல் கிசிச்சை முறை தற்போது உலகெங்கும் பரவி வருகிறது.

சென்னையில் இத்துறை வல்லுனர்களான டாக்டர் பெனாசிர் அவரது கணவர் டாக்டர் அஸ்லம் கான் ஆகியோர் இச் சிகிச்சையை உலக தரத்தில் வழங்கி வருகின்றனர்.

இன்று சென்னை நந்தனம் டெம்பிள் டவரில் அவர்களின் புதிய அல் ஷிபா கப்பிங் கிளினிக்கை மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA திறந்து வைத்தார்.

தமிழகத்தில் முதல்முறையாக ஜப்பானிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட கருவிகளுடன் கூடிய நவீன கிசிச்சை அறைகளையும் பார்வையிட்டார்.

இந்நிகழ்வில் மஜக தென் சென்னை கிழக்கு மாவட்ட செயலாளர் கையூம், மத்திய சென்னை கிழக்கு மாவட்ட செயலாளர் பிஸ்மில்லா கான், மாணவர் இந்தியா மாநில பொருளாளர் பஷீர், தலைமை செயற்குழு உறுப்பினர் ஜெய்னுதீன் உள்ளிட்ட மஜக நிர்வாகிகளும் பங்கேற்றனர்.

தகவல்,
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKitWING
#MJK2021
#தென்சென்னை_கிழக்கு_மாவட்டம்
19-01-2021

Top