ஜனவரி:19.,
டெல்டா மாவட்டங்கள் உட்பட பல மாவட்டங்களில் ஜனவரி மாத திடிர் தொடர் மழையால் 5 லட்சம் ஏக்கர் விளை நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளது.
நாகை தொகுதியின் பாதிப்புகளை பத்திரிக்கை செய்திகளுடன் சேகரித்து நாகை சட்டமன்ற தொகுதி உறுப்பினர் மு.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் இன்று தலைமைச் செயலகம் வருகை தந்தார்.
அங்கு வேளாண்மை துறையின் ஆணையர் மற்றும் முதன்மை செயலாளர் திரு. கஹன் தீப் சிங் பேடி, IAS அவர்களை சந்தித்து கோரிக்கை மனு அளித்தார்.
நீங்கள் பாதிப்புக்குள்ளான பகுதிகளை பார்வையிட்ட படங்கள் தனக்கு வந்ததாக அவர் MLA அவர்களிடம் தெரிவித்தார்.
தமிழக அரசு இன்சூரன்ஸ் நிறுவனங்களிடம் முழு இழப்பீடை பெற்று தர வேண்டும் என்றும், இது தவிர அரசு சார்பில் ஒரு ஏக்கருக்கு 30 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் இதற்கு தாங்கள் ஆவணம் செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.
தனது கள ஆய்வின் போது விவசாயிகளும், விவசாய தொழிலாளர்களும் தன்னிடம் கூறிய விபரங்களையும் MLA அவர்கள் அவரிடம் எடுத்து கூறினார்.
தான் விவசாயிகளின் பக்கம் இருந்து இதில் பேசி, உரிய நடவடிக்கைகள் எடுக்க அரசுக்கு பரிந்துரைப்பதாகவும் அவர் கூறினார்.
தமிழகம் முழுக்க மழையால் பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளின் நலன்களை கருத்தி கொள்ளுமாறும் மு.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் கோரிக்கை வைத்ததும் குறிப்பிடத்தக்கது.
தகவல்,
#நாகை_சட்டமன்ற_உறுப்பினர்_அலுவலகம்
19.01.2021