சென்னை.பிப்.10.,
குடியுரிமை கருப்பு சட்டங்களுக்கு எதிராக சென்னை வண்ணாரப்பேட்டையில் நடைபெறும் காத்திருப்பு போராட்டம், 25 நாட்களை கடந்து தொடர்ந்து நடைப்பெற்று வருகிறது.
நேற்றைய போராட்ட களத்தில் மனிதநேய ஜனநாயக கட்சியின் இணை பொதுச்செயலாளர் ஜே.எஸ்.ரிஃபாய் ரஷாதி அவர்கள் கலந்துக்கொண்டு சுதந்திரப்போராட்டம் முதல் நாட்டில் சமத்துவம் வேண்டி நாடிய சிறுபான்மை தலைவர்களின் தியாகங்களை பட்டியலிட்டார்.
தொடர்ந்து டெல்லியில் நடந்த வன்முறையை விளக்கி ஷாஹின் பாக் (காத்திருப்பு) போராட்ட களத்தில் பெண்களின் தியாகங்களைப் பற்றி பேசி தொடர் போராட்டத்தின் அடுத்த கட்ட தேவையை உணர்வுபூர்வமாக எடுத்துரைத்தார்.
இணை பொதுச்செயலாளர் உடன் மாநில மருத்துவ அணி துணைச்செயலாளர் அப்துல் ரஹ்மான், வடசென்னை மேற்கு மாவட்ட துணைச்செயலாளர் கதிர் உசேன் உள்ளிட்டவர்கள் உடனிருந்தனர்.
தகவல்;
#மஜகதகவல்தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#வடசென்னைமாவட்டம்
09-03-2020