தமிழ்நாடு அரசின் சிறுபான்மையினர் ஆணைய தலைவர் திரு. பீட்டர் அல்போன்ஸ் அவர்களை மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி தலைமையில், கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் மெளலா.நாசர், இணைப் பொதுச் செயலாளர் JS.ரிபாயி, மாநிலச் செயலாளர் நாச்சிக்குளம். தாஜ்தீன், மாநில துணை செயலாளர் நாகை முபாரக் ஆகியோர் சந்தித்தனர்.
அப்போது தமிழக சிறைகளில் சமூக வழக்குகளில் கைதாகி 10 வருடங்களை தாண்டி 20 வருடங்களுக்கும் மேலாக வாடி வரும் முஸ்லிம் கைதிகளின் முன் விடுதலை மற்றும் அவர்களின் மனித உரிமைகள் குறித்த மனு ஒன்றையும் பொதுச் செயலாளர் கையளித்து விளக்கி கூறினார்.
மேலும் அவர்களின் குடும்பங்கள் வறுமையில் வாடுவதால், அவர்கள் தொழில் தொடங்கவும், வருமானம் ஈட்டவும் உரிய வழி வகைகள் குறித்து ஆணையம் சார்பில் உரிய முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் அச்சந்திப்பில் வலியுறுத்தப்பட்டது.
மேலும் சென்னை IIT-யில் ஈராண்டுகளுக்கு முன்பு தற்கொலை செய்து கொண்ட கேரள மாணவி பாத்திமாவின் மர்ம மரணம் குறித்தும், அங்கு காட்டப்படும் சாதிய – மதவாத பாகுபாடுகள் குறித்தும் விசாரிக்க மற்றொரு மனுவும் மஜக சார்பில் கொடுக்கப்பட்டது.
இச்சந்திப்பில் மத, மொழி சிறுபான்மையினர் சந்திக்கும் பல பிரச்சனைகளும் விவாதிக்கப்பட்டது.
தகவல்,
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKITWING
#தலைமையகம்
11.08.2021