நலன் விசாரிப்பும் சந்திப்பும்… ஹைதர்அலி பாக்கர் ஆகியோருடன் மஜக பொதுச்செயலாளர் மற்றும் தலைமை நிர்வாகிகள் சந்திப்பு..

வக்பு வாரிய முன்னாள் சேர்மனும், மூத்த தலைவர்களில் ஒருவருமான சகோ.ஹைதர் அலி அவர்களை இன்று மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி சந்தித்து நலம் விசாரித்தார். அவருடன் மாநிலச் செயலாளர் நாச்சிக்குளம். தாஜ்தீன், மாநில துணைச் செயலாளர் நாகை. முபாரக், இளைஞர் அணி செயலாளர் அசாருதீன், மாணவர் இந்தியா மாநில பொருளாளர் பஷீர் அகமது ஆகியோரும் உடன் சென்றனர்.

கொரோனா பாதிப்புக்கு பின்பு தற்போது நலம் பெற்று பணிகளில் ஈடுபட்டு வருவதாகவும் அவர் கூறினார்.

அது போல் INTJ அலுவலகத்திற்கு சென்று அதன் தலைவர் S.M.பாக்கர் உள்ளிட்ட நிர்வாகிகளை பொதுச் செயலாளர் சந்தித்து பேசினார்.

அப்போது மஜக தலைமை ஒருங்கிணைப்பாளர் மௌலா.நாசர் அவர்களும் உடனிருந்தார்.

இச்சந்திப்புகள் இரண்டும் மகிழ்வும், நெகிழ்வும் கொண்டதாக இருந்தது.

தகவல்,
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKitWING
#மத்திய_சென்னை
10.08.2021