அக் 24, திருக்கோவிலூர் சட்டமன்ற தொகுதி T.எடப்பாளையத்தில் இன்று மாவட்ட அளவிலான மஜக வின் உறுப்பினர் சேர்ப்பு முகாம் தொடங்கி வைக்கப்பட்டது. முன்னதாக அங்கு வந்த பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA, அவர்களுக்கு மாவட்டம் சார்பில் நூற்றுக்கும் மேற்பட்ட மஜக வினர், இரு சக்கர வாகனங்களில் கொடிகளுடன் வரவேற்பு அளித்தனர். பொதுச் செயலாளருடன் மண்டல பொறுப்பாளரும், மாநில துணைச் செயலாளருமான நெய்வேலி இப்ராஹிம்,மற்றும் மாநில துணைச் செயலாளர் நாகை. முபாரக், ஆகியோரும் பங்கேற்றனர். அங்கு அவ்வூர் ஜமாத்தினர் மரியாதை நிமித்தமாக சந்தித்து பொதுச் செயலாளருடன் உரையாடினர். பிறகு பிரதான சாலையில் கட்சி கொடியை தொண்டர்களின் முழக்கங்களுக்கிடையே பொதுச்செயலாளர் அவர்கள் கொடியேற்றி வைத்தார். பிறகு மரக்கன்று ஒன்றையும் ஊன்றினார். பிறகு நடைபெற்ற நிகழ்வில் நூற்றுக்கணக்கானோர் கையெழுத்திட்ட உறுப்பினர் படிவங்கள் பொதுச்செயலாளரிடம் வழங்கப்பட்டது. அதனை தொடர்ந்து அனைவருக்கும் முதல் கட்டமாக அடையாள அட்டைகள் வழங்கப்பட்டது. இதில் பேசிய பொதுச்செயலாளர் அவர்கள், இக்கிராமத்தை தனி வருவாய் கிராமமாக மாற்ற மஜக முழு முயற்சி செய்யும் என பலத்த ஆரா வாரத்திற்கிடையே கூறினார். பிறகு துப்புரவு பணியாளர்களுக்கு மஜக சார்பில் அரிசி மூட்டைகள் வழங்கப்பட்டது. அது போல்
Month:
நெல்லிக்குப்பத்தில் மஜக சார்பில் முப்பெரும் விழா! பொதுச்செயலாளர் மு தமிமுன் அன்சாரி MLA பங்கேற்பு!
அக்-24, கடலூர் வடக்கு மாவட்டம் நெல்லிக்குப்பத்தில் #மனிதநேய_ஜனநாயக_கட்சி-யின் சார்பில் கட்சி கொடியேற்று விழா, மாவட்ட அலுவலகம் திறப்பு விழா, உறுப்பினர் சேர்ப்பு தொடக்க விழா என முப்பெரும் விழா நடைப்பெற்றது. முன்னதாக நெல்லிக்குப்பம் நுழைவாயிலில் நகர #மஜக சார்பாக வாகன வரவேற்பு நிகழ்ச்சி நடைப்பெற்றது. தொடர்ந்து தபால் நிலையம், தைக்கால் ஆகிய இடங்களில் பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் கட்சி கொடியை ஏற்றி வைத்தார். அடுத்ததாக பிரதான சாலையில் மாவட்ட- நகர அலுவலகத்தை திறந்து வைத்தார். அதன் பிறகு நூர் மஹாலில் நடைப்பெற்ற நிகழ்ச்சியில், புதிதாக கட்சியில் சேர்ந்தவர்களுக்கு மத்தியில் உரையாற்றினார். முதல் கட்டமாக அனைவருக்கும் அடையாள அட்டை வழங்கப்பட்டது. அவ்வூரை சேர்ந்த சமூக சேவகர்கள், சாதனையாளர்களுக்கும் மஜக சார்பில் நற்சான்றிதழ் வழங்கப்பட்டது. இந்நிகழ்வுக்கு பிறகு அவ்வூர் ஜமாத்தார்கள் வருகை தந்து பொதுச்செயலாளரை சந்தித்து பேசினர். அப்போது மஜகவின் பணிகளுக்கு தங்களுடைய பாராட்டுகளை தெரிவித்தனர். மதிமுக, விசிக, முஸ்லீம் லீக், SDPI ஆகிய கட்சிகளை சேர்ந்தவர்கள் மரியாதை நிமித்தமாக பொதுச்செயலாளரை சந்தித்து பேசினர். தொடர்ந்து மாவட்ட அளவில் உறுப்பினர் சேர்க்கைக்கான திட்டமிடல்கள் குறித்து மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை நடைப்பெற்றது. மாவட்ட செயலாளர் முகம்மது யூசுப்
தமிழக மக்களின் உணர்வுகளுக்கு ஆளுநர் மதிப்பளிக்க வேண்டும்! மஜக பொதுச்செயலாளர் மு தமிமுன் அன்சாரி MLA அறிக்கை!
மருத்துவ மாணவர் சேர்க்கையில் அரசுப் பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கு 7.5 சதவீத உள் இட ஒதுக்கீட்டை வழங்கும் சட்ட மசோதாவுக்கு தமிழக கவர்னர் ஒப்புதளிக்காமல் கால தாமதம் செய்வதை வன்மையாக கண்டிக்கிறோம். இந்த உள் இடஒதுக்கீடு கோரிக்கையை தமிழக சட்டமன்றத்தில் முதலில் எழுப்பியது நாங்கள் தான். அந்த வகையில் இந்த மசோதா சட்டமாக்கப்பட வேண்டும் என்பதில் உறுதிக்காட்டுகிறோம். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு மாநில அரசு சார்பில், மக்கள் பிரதிநிதிகளால் ஏகமனதாக நிறைவேற்றப்பட்ட ஒரு மசோதாவுக்கு ஒப்புதல் வழங்குவது என்பது ஆளுனரின் ஜனநாயக கடமையாகும். எளிய மக்களின் நலன் காக்கும் ஒரு சமூக நீதி விவகாரத்தில், முடிவெடுப்பதற்கு நான்கு வாரங்கள் வரை ஆகலாம் என கவர்னர் மாளிகை தெரிவித்திருப்பது ஏற்கத்தக்கதல்ல. இது மாணவர் சேர்க்கையில் பாதிப்பை ஏற்படுத்துவது மட்டுமல்ல, இச்சட்டத்தையே நீர்த்து போகச் செய்யும் நோக்கமும் கொண்டதாக இருக்கிறது. இம்மசோதா குறித்து சமீபத்தில் தமிழக அமைச்சர்கள் கவர்னரை சந்தித்தப் போது, பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் சாதியினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீட்டை செயல்படுத்தினால், இந்த மசோதாவுக்கு ஒப்புதல் தருகிறோம் என அவர் சொன்னதாக வரும் தகவல்கள் அதிர்ச்சியளிக்கிறது. இதன் உண்மைத்தன்மை குறித்து தமிழக அமைச்சர்கள் விளக்க வேண்டும். கூட்டாட்சி தத்துவத்திற்கும்,
நாகூரில் மஜகவில் இணைந்த புதியவர்கள்! பொதுச்செயலாளர் மு தமிமுன் அன்சாரி அவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றனர்!
அக்.22, தமிழகமெங்கும் மனிதநேய ஜனநாயக கட்சியின் 75 நாட்கள் தீவிர உறுப்பினர் சேர்க்கை முகாம்கள் அக்.17 தொடங்கி எழுச்சியோடு நடைப்பெற்று வருகின்றன. டிச.31 வரை திட்டமிடப்பட்டுள்ள இந்நிகழ்வை முன்னிட்டு தீவிர உறுப்பினர் சேர்க்கை முகாம்கள், புதிய கிளைகள் கட்டமைப்பு, அலுவலகம் திறப்பு, கொடியேற்றும் நிகழ்வு என தமிழகமெங்கும் மஜகவினர் தீவிர களப்பணியாற்றி வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக நாகை மாவட்டம், நாகூரில் S.வேலுச்சாமி, S.உமாநாத், M.அழகர் சாமி, U.சிராஜுதீன், U.ராஜா முஹம்மது, M.A சர்தார், K.அலி அக்பர், M.ஷேக் இஸ்மாயில் உள்ளிட்ட திரளானோர் மஜக வில் தங்களை இணைத்து கொண்டுள்ளனர். அவர்கள் இன்று பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA அவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றனர். இதில் மாநில துணைச் செயலாளர் நாகை முபாரக், மாவட்ட பொருளாளர் சதக்கத்துல்லாஹ், துணைச் செயலாளர்கள் சாகுல்ஹமீது @ கண்ணுவாப்பா, முன்ஷி யூசுப்தீன், மு. மாவட்ட இளைஞரணி செயலாளர் ஷேக் மஸ்தான், நாகூர் நகர செயலாளர் அபுசாலி சாஹிப், பொருளாளர் சாகுல் ஹமீது, துணை செயலாளர்கள் சவுக்கத் அலி, யாசர் அரபாத், 7வது வார்டு செயலாளர் ஹஜ் முகம்மத் உள்ளிட்டோர் உடனிருந்தனர். தகவல் ; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி, #MJKitWING #நாகை_மாவட்டம்
மஜக தலைமையக நியமன அறிவிப்பு.!மயிலாடுதுறை மாவட்ட துணைச் செயலாளர்கள்
மனிதநேய ஜ னநாயக கட்சியின் மயிலாடுதுறை மாவட்ட துணைச் செயலாளர்களாக, 1) ஆக்கூர் மு. ஷாஜகான் த/பெ; முஹம்மது ஏஹ்யா அலைபேசி; 97864022487 2) M.S. மிஸ்பாஹூதீன் த/பெ; சபீர் நீடூர் நெய்வாசல் அலைபேசி;9487033071 3) A. அசேன் அலி த/பெ; அன்வர் பாட்சா தைக்கால், சீர்காழி அலைபேசி;6382524691 4) B. முகமது இப்ராஹிம் த/பெ; பஜீருதீன் வேலம்புதுக்குடி அலைபேசி; 7639449580 MS. அஜ்மல் உசேன் த/பெ; சையது உசேன் மயிலாடுதுறை அலைபேசி; 9865471921 ஆகியோர் நியமனம் செய்யப்படுகிறார்கள், மனிதநேய சொந்தங்கள் இவர்களுக்கு நிர்வாக ரீதியாக முழு ஒத்துழைப்பு நல்கிட கேட்டுக்கொள்கிறேன். இவண்; மு.தமிமுன்அன்சாரி MLA., #பொதுச்செயலாளர் #மனிதநேய_ஜனநாயக_கட்சி 22-09-2020