சேலம்:அக்.30., மனிதநேய ஜனநாயக கட்சியின் சேலம் மாவட்ட ஆலோசனை கூட்டம் மாவட்டச் செயலாளர் மெஹபூப்அலி, அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளர்களாக மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாருன் ரசீது மற்றும் அவைத் தலைவர் நாஸர் உமரி, இணைப் பொதுச்செயலாளர் ஜே.எஸ். ரிபாய், துணை பொதுச் செயலாளர் செய்யது முகம்மது பாருக், மாநில துணைச் செயலாளர் பாபு ஷாஹின்ஷா, ஆகியோர் கலந்து கொண்டு ஆலோசனைகள் வழங்கினர். இக்கூட்டத்தில் மாவட்டத்தின் கட்சி வளர்ச்சி பணிகள் குறித்தும், தீவிர உறுப்பினர் சேர்க்கை நடத்துவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. இந்நிகழ்வில் மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #சேலம்_மாவட்டம் 27.10.2020
Month:
தமிழக அரசின் துணிச்சல் மிக்க நடவடிக்கை ! மஜக பொதுச்செயலாளர் மு தமிமுன் அன்சாரி MLA அறிக்கை!
அரசுப் பள்ளிகளில் படித்த தமிழக மாணவர்களுக்கு மருத்துவ கல்வியில் இடம் கிடைக்கும் வகையில் 7.5. சதவீத இட ஒதுக்கீடு வழங்க நேற்று தமிழக அரசு அரசாணை வழங்கியிருப்பதை மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் வரவேற்கிறோம். தமிழக சட்டசபையில் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு, கவர்னர் ஒப்புதல் வழங்காமல் தாமதித்த நிலையில், சமூக நீதியை காப்பாற்றும் வகையில் தமிழக அரசு இம்முடிவை மேற்கொண்டுள்ளதை துணிச்சலான நடவடிக்கை என பாராட்டுகிறோம். இதற்கு எந்த ஆபத்தும் நேராத வகையில் தமிழக அரசு கவனமுடன் இருக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறோம். இவண், மு.தமிமுன் அன்சாரி MLA, பொதுச் செயலாளர், #மனிதநேய_ஜனநாயக_கட்சி. 30.10.2020
மஜக திருப்பத்தூர் மாவட்ட ஆலோசனை கூட்டம்! மஜக பொருளாளர் மற்றும் தலைமை நிர்வாகிகள் பங்கேற்பு.!
திருப்பத்தூர்.அக்.29., மனிதநேய ஜனநாயக கட்சியின் திருப்பத்தூர் மாவட்ட ஆலோசனை கூட்டம் மாவட்டச்செயலாளர் ஜஹிருல் ஜமா தலைமையில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளர்களாக மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாருன் ரசீது மற்றும் அவைத் தலைவர் நாஸர் உமரி, இணைப் பொதுச்செயலாளர் ஜே.எஸ். ரிபாய் ஆகியோர் கலந்து கொண்டு ஆலோசனைகள் வழங்கினர். இக்கூட்டத்தில் மாவட்டத்தின் கட்சி வளர்ச்சி பணிகள் குறித்தும், தீவிர உறுப்பினர் சேர்க்கை நடத்துவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. இந்நிகழ்வின் போது J.M.வசீம் அக்ரம் உடனிருந்தார். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #திருப்பத்தூர்_மாவட்டம் 28.10.2020
மஜக வேலூர் மாவட்ட ஆலோசனை கூட்டம்..! மஜக பொருளாளர் மற்றும் தலைமை நிர்வாகிகள் பங்கேற்பு..!!
. வேலூர்.அக்.29., மனிதநேய ஜனநாயக கட்சியின் வேலூர் மாவட்ட ஆலோசனை கூட்டம் மாவட்டச் செயலாளர் முகமது யாசின் தலைமையில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளர்களாக மஜக மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாருன் ரசீது மற்றும் அவைத் தலைவர் நாஸர் உமரி, இணைப் பொதுச்செயலாளர் ஜே.எஸ். ரிபாய் ஆகியோர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் வேலூர் மாவட்டத்தில் மஜக சார்பில் டிசம்பர் 31 வரை, தீவிர உறுப்பினர் சேர்ப்பு முகாம் நடத்துவது குறித்தும் புதிய கிளைகள் கட்டமைப்பு, அலுவலகம் திறப்பு, கொடியேற்றும் நிகழ்வுகள் நடத்துவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. மேலும், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் சன்னி போஸ்(எ) தேவ இன முதல்வன் அவர்கள் நேற்று இயற்கை எய்தினார், அவர்களின் இல்லத்திற்கு மாநிலப்பொருளாளர் மற்றும் தலைமை நிர்வாகிகள் நேரில் சென்று ஆறுதல் கூறினர். மற்றும் வேலூர் நகர செயலாளர் பயாஸ் அவர்களின் தாயார் சில நாட்களுக்கு முன் மறைந்தார், கஸ்பா பகுதியைச் சேர்ந்த ஹைதர் அவர்களின் தகப்பனாரும் மரணமடைந்தார். இவர்களின் இல்லத்திற்கு நேரில் சென்று ஆறுதல் கூறினர். இதில் மாவட்ட நிர்வாகிகள், வேலூர் நகர நிர்வாகிகள், குடியாத்தம் நகர நிர்வாகிகள், கிளை நிர்வாகிகள் உடனிருந்தனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #வேலூர்_மாவட்டம் 28.10.2020
மஜக திருச்சி மாவட்ட செயற்குழு கூட்டம்.!தலைமை நிர்வாகிகள் பங்கேற்பு.!
திருச்சி.அக்.27., மனிதநேய ஜனநாயக கட்சியின் திருச்சி மாவட்ட செயற்குழுக் கூட்டம் நேற்று (26.10.2020) மாலை மாவட்டச்செயலாளர் பாபு பாய் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்விற்கு சிறப்பு அழைப்பாளர்களாக மஜக மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது, தலைமை ஒருங்கிணைப்பாளர் மவ்லா நாசர், இணை பொதுச்செயலாளர் ஜே.எஸ்.ரிபாய் ரஷாதி உள்ளிட்டோர் பங்கேற்றனர். இக்கூட்டத்தில் கட்சியின் வளர்ச்சி பணிகள் குறித்தும், தீவிர உறுப்பினர் சேர்க்கை நடத்துவது குறித்தும், தமிழக சட்டமன்றத் தேர்தல் 2021 முன் ஏற்பாடுகள் குறித்தும் ஆலோசனை செய்யப்பட்டது, மேலும் மாவட்டத்திற்கு புதிதாக பொறுப்புக்குழு அமைக்கப்பட்டது. இந்நிகழ்வில் மாவட்ட நிர்வாகிகள், மாவட்ட அணி நிர்வாகிகள், நகர, கிளை செயலாளர்கள் பங்கேற்றனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKitWING #திருச்சி_மாவட்டம் 26.10.2020