மஜக வேலூர் மாவட்ட ஆலோசனை கூட்டம்..! மஜக பொருளாளர் மற்றும் தலைமை நிர்வாகிகள் பங்கேற்பு..!!

.


வேலூர்.அக்.29.,

மனிதநேய ஜனநாயக கட்சியின் வேலூர் மாவட்ட ஆலோசனை கூட்டம் மாவட்டச் செயலாளர் முகமது யாசின் தலைமையில் நடைபெற்றது.

இதில் சிறப்பு அழைப்பாளர்களாக மஜக மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாருன் ரசீது மற்றும் அவைத் தலைவர் நாஸர் உமரி, இணைப் பொதுச்செயலாளர் ஜே.எஸ். ரிபாய் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் வேலூர் மாவட்டத்தில் மஜக சார்பில் டிசம்பர் 31 வரை, தீவிர உறுப்பினர் சேர்ப்பு முகாம் நடத்துவது குறித்தும் புதிய கிளைகள் கட்டமைப்பு, அலுவலகம் திறப்பு, கொடியேற்றும் நிகழ்வுகள் நடத்துவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

மேலும், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் சன்னி போஸ்(எ) தேவ இன முதல்வன் அவர்கள் நேற்று இயற்கை எய்தினார், அவர்களின் இல்லத்திற்கு மாநிலப்பொருளாளர் மற்றும் தலைமை நிர்வாகிகள் நேரில் சென்று ஆறுதல் கூறினர்.

மற்றும் வேலூர் நகர செயலாளர் பயாஸ் அவர்களின் தாயார் சில நாட்களுக்கு முன் மறைந்தார், கஸ்பா பகுதியைச் சேர்ந்த ஹைதர் அவர்களின் தகப்பனாரும் மரணமடைந்தார்.

இவர்களின் இல்லத்திற்கு நேரில் சென்று ஆறுதல் கூறினர்.

இதில் மாவட்ட நிர்வாகிகள், வேலூர் நகர நிர்வாகிகள், குடியாத்தம் நகர நிர்வாகிகள், கிளை நிர்வாகிகள் உடனிருந்தனர்.

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#வேலூர்_மாவட்டம்
28.10.2020