திருப்பத்தூர்.அக்.29.,
மனிதநேய ஜனநாயக கட்சியின் திருப்பத்தூர் மாவட்ட ஆலோசனை கூட்டம் மாவட்டச்செயலாளர் ஜஹிருல் ஜமா தலைமையில் நடைபெற்றது.
இதில் சிறப்பு அழைப்பாளர்களாக மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாருன் ரசீது மற்றும் அவைத் தலைவர் நாஸர் உமரி, இணைப் பொதுச்செயலாளர் ஜே.எஸ். ரிபாய் ஆகியோர் கலந்து கொண்டு ஆலோசனைகள் வழங்கினர்.
இக்கூட்டத்தில் மாவட்டத்தின் கட்சி வளர்ச்சி பணிகள் குறித்தும், தீவிர உறுப்பினர் சேர்க்கை நடத்துவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
இந்நிகழ்வின் போது J.M.வசீம் அக்ரம் உடனிருந்தார்.
தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#திருப்பத்தூர்_மாவட்டம்
28.10.2020