சென்னை.அக்.31., மனிதநேய ஜனநாயக கட்சியின் செங்கல்பட்டு வடக்கு மாவட்ட ஆலோசனை கூட்டம் கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளர்களாக மஜக மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாருன் ரசீது மற்றும் துணை பொதுச்செயலாளர் N.A.தைமிய்யா, மாநில துணைச்செயலாளர் பல்லாவரம் ஷஃபி, MJTS தலைவர் பம்மல் சலீம், தகவல் தொழில்நுட்ப அணி மாநில துணை செயலாளர் தாரிக் ஆகியோர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் செங்கை வடக்கு மாவட்டத்தில் மஜக சார்பில் டிசம்பர் 31 வரை, தீவிர உறுப்பினர் சேர்ப்பு முகாம் நடத்துவது குறித்தும், புதிய கிளைகள் கட்டமைப்பு குறித்தும் ஆலோசிக்கப்பட்டது, மேலும் மாவட்ட நிர்வாகம் சீரமைக்கப்பட்டது. இதில் மாவட்ட நிர்வாகிகள், நகர நிர்வாகிகள் கலந்து கொண்டனர். தகவல்; #மஜகதகவல்தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #செங்கைவடக்குமாவட்டம் 30.10.2020
Month:
அமைதியை கெடுப்பவர்களை தமிழக மக்கள் அனுமதிக்க மாட்டார்கள்! அறந்தாங்கியில் மஜக மாவட்ட அலுவலகத்தை திறந்து வைத்து பொதுச்செயலாளர் மு தமிமுன் அன்சாரி MLA பேட்டி!
புதுக்கோட்டை.அக்.31, புதுக்கோட்டை கிழக்கு மாவட்ட மனிதநேய ஜனநாயக கட்சியின் மாவட்ட அலுவலகத்தை அறந்தாங்கியில் பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA திறந்து வைத்தார். இந்நிகழ்வில் மாநிலச் செயலாளர் நாச்சிகுளம். தாஜுதீன், மாநில துணைச் செயலாளர் துரை முகம்மது, மாநில விவசாய அணி செயலாளர் அப்துல் சலாம், மாவட்டச் செயலாளர் அறந்தாங்கி முபாரக் ஆகியோர் உடன் இருந்தனர். அங்கு பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைப்பெற்றது. அதில் பேசிய பொதுச் செயலாளர் அவர்கள், அறந்தாங்கியை தலைநகராக கொண்டு புதிய மாவட்டத்தை அறிவிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்தார். அமைதிப் பூங்காவான தமிழகத்தை அமளி துமளியாக்கி விட சிலர் துடிக்கிறார்கள். இதை தமிழக மக்கள் அனுமதிக்க மாட்டார்கள் என்றவர், தமிழகத்தில் பெரியாரிசம், அண்ணாயிசம், கம்யூனிசம், தமிழ் தேசியம் ஆகியவற்றை எதிர்ப்பவர்கள் அரசியலில் வெற்றி பெற முடியாது என்றும் கூறினார். பிறகு தொண்டர்களுடன் உரையாடி, கட்சி வளர்ச்சி குறித்து கேட்டறிந்தார். பிறகு மனிதநேய ஜனநாயக தொழிற்சங்கத்தின்( MJTS) பெயர் பலகையை திறந்து வைத்து, நகரில் 4 இடங்களில் மஜகவின் கொடிகளை ஏற்றி வைத்தார். முன்னதாக நகரின் முக்கிய வீதிகள் வழியே மஜக கொடிகளுடன் வாகன அணிவகுப்பும் நடைபெற்றது. அலுவலக திறப்பு விழா பகுதி மஜக தோரணங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.
மஜக தலைமையக நியமன அறிவிப்பு! மயிலாடுதுறை மாவட்ட அணி நிர்வாகிகள்
மனிதநேய ஜனநாயக கட்சியின் மயிலாடுதுறை மாவட்ட அணி நிர்வாகிகளாக, வணிகர் அணி மாவட்டச் செயலாளராக, லியாகத் அலி த/பெ; ஜக்கரியா அலைபேசி; 9442507259 இஸ்லாமிய கலாச்சார பேரவை மாவட்டச் செயலாளராக, முகமது பாசில் த/பெ: முகமது இக்பால் அஅலைபேசி; 9524142283 விவசாய அணி மாவட்டச் செயலாளராக Y. H.ஹாஜா சலீம் த/பெ; ஹிதாயத்துல்லா அலைபேசி; 9600510892 இளைஞரணி மாவட்டச் செயலாளராக, முஹம்மது தவ்பிக் த/பெ; முஹம்மது சலிம் அலைபேசி; 9003718423 தகவல் தொழில்நுட்ப அணி மாவட்டச் செயலாளராக, M.A முஹம்மது ஜெப்ருதீன் த/பெ; முஹம்மது ஆரிபின் அலைபேசி; 9486427217 ஆகியோர் நியமனம் செய்யப்படுகிறார்கள், மனிதநேய சொந்தங்கள் இவர்களுக்கு நிர்வாக ரீதியாக முழு ஒத்துழைப்பு நல்கிட கேட்டுக்கொள்கிறேன். இவண்; மு.தமிமுன்அன்சாரி MLA., #பொதுச்செயலாளர் #மனிதநேயஜனநாயககட்சி 31-10-2020
MJTS தலைமையக நியமன அறிவிப்பு.! – மயிலாடுதுறை மாவட்ட செயலாளர்
தோப்புத்துறையில் உற்சாகமாக தொடங்கிய மஜகவின் உறுப்பினர் சேர்ப்பு முகாம்!
அக். 30, மஜக வின் 75 நாட்கள் உறுப்பினர் சேர்க்கை முகாம் இன்று வேதாரண்யம் தொகுதி தோப்புத்துறையில் உற்சாகத்தோடு தொடங்கியது. நகரச் செயலாளர் கறுப்பு (எ) முகம்மது ஷரிப் தலைமையில் நடைபெற்ற இம்முகாமை மாவட்ட துணைச் செயலாளர் ஷேக் அஹ்மதுல்லாஹ் தொடங்கி வைத்தார். திரளானோர் ஆர்வமுடன் படிவங்களில் கையெழுத்திட்டு, முதல் கட்ட அடையாள அட்டைகளை பெற்று கொண்டனர். 4 கட்டங்களாக இம்முகாம் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என மஜகவினர் தெரிவித்துள்ளனர். இந்நிகழ்வில் முன்னாள் மாவட்ட நிர்வாகி மஜித், தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட பொருளாளர் முபீன், இளைஞரணி செயலாளர் சதாம், மாணவர் இந்தியா செயலாளர் அப்துல் காதர் மீரான், துணைச் செயலாளர் நிராஸ் உள்ளிட்ட மஜகவினர் உடனிருந்தனர். தகவல் ; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி, #MJKitWING #MJK2021 #நாகை_மாவட்டம்