INTJ தலைவர்களுடன் மஜக தலைவர்கள் சந்திப்பு

இந்திய தவ்ஹீத் ஜமாத் தலைமையகத்திற்கு மஜக பொதுச் செயலாளர் தமிமுன் அன்சாரி MLA  , துணைப் பொதுச் செயலாளர் மதுக்கூர் . ராவுத்தர்ஷா , மாநிலச் செயலாளர்கள் தைமிய்யா மற்றும் நாச்சிக்குளம் . தாஜூதீன் ஆகியோர் வருகை தந்தனர் .

அங்கு சகோதரர் S.M. பாக்கர் , முனீர் , மெய்தீன் ஆகியோர் வரவேற்றனர் .

நாகப்பட்டினம் உள்ளிட்ட தொகுதிகளில் அதிமுக-மஜக கூட்டணிக்கு ஆதரவாக பரப்புரை செய்ததற்கு பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி MLA நன்றி தெரிவித்துக் கொண்டார் .

இது தவிர வழக்கமான நட்பு சார்ந்த உரையாடல்களுடன் முக்கால் மணி நேரத்திற்கு மேல் இச்சந்திப்பு நடைபெற்றது .

– மஜக ஊடகப்பிரிவு

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.