6வது முறையாக முதல்வராக பொறுப்பேற்றிருக்கும் டாக்டர் அம்மாவுக்கு மனிதநேய ஜனநாயக கட்சி வாழ்த்து

(மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளர் M. தமிமுன் அன்சாரி MLA வெளியிடும் அறிக்கை)

தமிழ்நாட்டின் முதல்வராக 6-வது முறையாக பொறுப்பேற்றிருக்கும் அகில இந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் பொதுச் செயலாளர் #டாக்டர்_அம்மா அவர்களுக்கு மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் நெஞ்சார்ந்த பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறோம் .

32 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழ்நாட்டை தொடர்ச்சியாக ஆட்சி செய்யும் வாய்ப்பை அவருக்கு வழங்கிய தமிழக மக்களுக்கு எங்களது நன்றிகளையும் தெரிவித்துக்கொள்கிறோம் .

முதல்வராக பொறுப்பேற்ற 1 மணி நேரத்திற்குள் தேர்தல் வாக்குறுதிகளில் முக்கியமானவற்றை நிறைவேற்றும் வகையில் 5 கோப்புகளில் கையெழுத்திட்டுருப்பது தமிழ்
நாட்டு மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது .

பூரண மதுவிலக்கு படிப்படியாக அமல்படுத்தப்படும் என்ற வாக்குறுதியை நிறைவேற்றும் முகமாக டாஸ்மாக் கடைகள் இயங்கும் நேரத்தை குறைத்திருப்பதும் , முதல்கட்டமாக 500 கடைகள் மூடப்படும் என அறிவித்திருப்பதும் பெரும் நம்பிக்கையை ஊட்டியிருக்கிறது .

கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய கடன்கள் தள்ளுபடி , 100 யூனிட் மின்சாரத்திற்கு கட்டணம் தள்ளுபடி , தாலிக்கு 1 பவுன் தங்கம் , நெசவாளர்களுக்கான இலவச மின்சாரத்தை 750 யூனிட்டாக உயர்த்தி இருப்பது என 5 முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்டு மக்களின் மீதான தனது அக்கறையை தமிழக முதல்வர் அம்மா அவர்கள் வெளிப்படுத்தி இருக்கிறார்கள் .

தொடர்ந்து அவரது தலைமையிலான அரசு மக்களுக்கு மேலும் நல்ல பல பணிகளை ஆற்றவும் , சிறப்பான ஆட்சியை வழங்கவும் இறைவனிடம் பிரார்த்திக்கிறோம் .
நன்றி..
இவண்

M.தமிமுன் அன்சாரி MLA
பொதுச் செயலாளர்
மனிதநேய ஜனநாயக கட்சி
24.05.2016

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*