மே.26., இன்று காயல்பட்டிணம் வா வு வஜிஹா மகளிர் கல்லூரி நிர்வாகத்தின் அழைப்பினை ஏற்று மஜக பொதுச் செயலாளர் M. தமிமுன் அன்சாரி MLA அவர்கள் அங்கு வருகை தந்தார் .
கல்லூரி நிர்வாகியும் , முன்னால் காயல்பட்டிணம் நகர்மன்றத் தலைவருமான செய்யது அப்துல் ரஹ்மான் அவர்களும் , நிர்வாக துணைச் செயலாளர் அஹ்மது இஷாக் உள்ளிட்டோரும் வரவேற்றனர் .
பொதுச் செயலாளருடன் , பொருளாளர் ஹாரூன் , மாநிலச் செயலாளர்கள் தைமிய்யா , நாச்சக்குளம் தாஜுதீன் உள்ளிட்டோரும் வருகை தந்தனர் .
தேனீர் விருந்துடன் நடைபெற்ற இச்சந்திப்பின் போது சமுதாய அரசியல் குறித்தும் , கல்வி விவகாரங்கள் குறித்தும் உரையாடப்பட்டது .
– மஜக ஊடகப்பிரிவு