வேலூர்.ஆக.31., கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கை பணியில் தமிழகம் முழுவதும் மனிதநேய ஜனநாயக கட்சியினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு நிகழ்வாக வேலூர் மாவட்ட மனிதநேய ஜனநாயக கட்சி-யின் சார்பில் 2 ஆம் கட்டமாக வேலூர் மாநகரின் R.N.பாளையம் கடைவீதியில் மருத்துவ அணி மாவட்ட துணை செயலாளர் அன்சர் அவர்களின் தலைமையில் கபசுரக் குடிநீர் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக மாவட்ட செயலாளர் முகமது யாசின் அவர்கள் கலந்து கொண்டு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் மாவட்ட நிர்வாகிகள் ஜாகிர் உசேன், சையத் உசேன், ஷமீல், சாதிக், பயாஸ் ஆகியோர் கலந்து கொண்டனர். தகவல் #மஜக_தகவல்_தொழில்_நுட்ப_அணி #MJK_IT_WING #வேலூர்_மாவட்டம் 31.08.2020
Month:
மஜக புதுக்கோட்டை மேற்கு மாவட்ட சிறப்பு நிர்வாகக்குழு கூட்டம்!!
கறம்பக்குடி:ஆக.31., மனிதநேய ஜனநாயக கட்சி புதுக்கோட்டை மேற்கு மாவட்டம் கறம்பக்குடியில் சிறப்பு நிர்வாகக்குழு கூட்டம் மாவட்ட செயலாளர் முஹம்மது ஜான், அவர்கள் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட துணைச்செயலாளர் லெட்சுமணன் , மாவட்ட இளைஞரணி செயலாளர் அப்துல் காதர் ஆகியோர் முன்னிலை வகித்தனர், நகர செயலாளர் ஆசை அப்துல்லா, வரவேற்புரை நிகழ்த்தினார், ஒன்றிய செயலாளர் முஹம்மது அப்துல்லா, அறிமுக உரையாற்றினார் . நகர இளைஞரணி செயலாளர் முஹம்மது மன்சூர், தீர்மானங்கள் முன்மொழிந்தார். இக்கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 1. எதிர்வரும் 02/09/2020 புதன்கிழமை கறம்பக்குடியில் மஜக மருத்துவ சேவை அணி சார்பில் கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி நடத்துவது. 2. கறம்பக்குடியில் விரைவில் நகர அலுவலகம் திறப்பது. 3, கட்சியின் வளர்ச்சிக்கு தீவிர களப்பணியாற்றுவது, மேற்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் மாவட்ட, ஒன்றிய, நகர, நிர்வாகிகள் பங்கேற்றனர். நிகழ்வின் இறுதியில் நகர பொருளாளர் ஜியாவுதீன், நன்றியுரை நிழ்த்தினார். தகவல் : #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKITWING #கறம்பக்குடி_நகரம் #புதுக்கோட்டை_மேற்கு_மாவட்டம் 30.08.2020
மஜகவில் இணையும் இளைஞர் பட்டாளம்!!
வேலூர்.ஆக.30, மனிதநேய ஜனநாயக கட்சி-யின் சேவை அரசியலின்பால் ஈர்க்கப்பட்டு தமிழகம் முழுவதும் இளைஞர்கள், மாணவர்கள், சமூக ஆர்வலர்கள் என பல்வேறு மக்கள் தன்னெழுச்சியாக மஜக-வில் இணைந்து வருகின்றனர். அதன் ஒரு நிகழ்வாக வேலூர் மாவட்டம் இளைஞர் அணி செயலாளர் அமீன், துணைச் செயலாளர் சாதிக் முன்னிலையில் 10-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் தன்னெழுச்சியாக தங்களை மஜகவில் இணைத்து கொண்டனர். புதிதாக கட்சியில் இணைந்தவர்கள் மத்தியில் கட்சியின் கொள்கை மற்றும் கட்சியின் வளர்ச்சி பணிகள் குறித்தும் எடுத்துரைக்கப்பட்டது. இந்நிகழ்வில் மாவட்ட மருத்துவ அணி துணைச் செயலாளர் அன்சர், ஹயாத், அலி மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர். தகவல், #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKITWING #வேலூர்_மாவட்டம் 30-08-2020
ஊரடங்கால் உணவின்றி தவித்தவர்களுக்கு உணவு வழங்கிய கோவை MJTS தொழிற்சங்கத்தினர்!!
கோவை:ஆக.30., கொரோனா நோய்த்தொற்று நடவடிக்கையாக தமிழகமெங்கும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகின்றது. அதைத்தொடர்ந்து சாலையோரத்தில் உணவு இன்றி இருப்பவர்களுக்கு மனிதநேய ஜனநாயக கட்சியின் தொழிற்சங்க பிரிவான மனிதநேய ஜனநாயக தொழிற்சங்கத்தின் (MJTS) சார்பில் உணவு ஏற்பாடு செய்யப்பட்டு கோவை அரசு மருத்துவமனை, ரயில் நிலையம், உக்கடம் பேருந்து நிலையம், சிங்காநல்லூர், பேருந்து நிலையம், ராமநாதபுரம் போன்ற பகுதிகளில் தொழிற்சங்க மாவட்ட தலைவர் அபு, அவர்கள் தலைமையில் சுமார் 500க்கும் மேற்பட்ட உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் தொழிற்சங்க மாநில செயலாளர் கோவை M.H.ஜாபர்அலி, தகவல் தொழில்நுட்ப அணி மாநில துணைச் செயலாளர் கோவை சம்சுதீன், மாவட்ட செயலாளர் M.H.அப்பாஸ் மாவட்ட பொருளாளர் TMS.அப்பாஸ், மாவட்ட துணை செயலாளர்கள் சிங்கை சுலைமான், அபு, ஆகியோர் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு உணவு பொட்டலங்களை வழங்கினர். இப்பணியில் தொழிற்சங்க மாவட்ட செயலாளர் உசைன், மாவட்ட பொருளாளர் ஷாஜஹான், விவசாய அணி மாவட்ட செயலாளர் அன்வர் பாஷா, வழக்கறிஞர் அணி மாவட்ட செயலாளர் நூருல் அமீன், தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட செயலாளர் சிராஜுதீன், தொழிற்சங்க மாவட்ட துணை செயலாளர்கள் ஜாகீர், அப்துல் சமது, அன்சர், சிங்கநல்லூர் கிளைச் செயலாளர்
மஜக மருத்துவ சேவை அணி நெல்லை மாவட்டம் சார்பாக கபசுரக்குடிநீர் விநியோகம்.!
நெல்லை.ஆக.30., மனிதநேய ஜனநாயக கட்சியின் நெல்லை மாவட்ட மருத்துவ சேவை அணி சார்பாக நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் கபசுரக் குடிநீரை பழையபேட்டை இரானி அண்ணா கலைகல்லூரி அருகில் உள்ள காந்திநகர் பகுதி மக்களுக்கு வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட மருத்துவ சேவை அணி செயலாளர் புகாரி தலைமை தாங்க, பேட்டை நகர துணை செயலாளர் இஸ்மாயில் முன்னிலை வகித்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்டச் செயலாளர் நெல்லை நிஜாம், மாவட்டப்பொருளாளர் பேட்டை மூஸா, காந்திநகர் பள்ளி ஜமாத் தலைவர் முனிர் அவர்கள், மாவட்ட மனித உரிமை பாதுகாப்பு அணி செயலாளர் அப்பாஸ், MJTS மாவட்ட செயலாளர் நாகூர்மீரான், மேலப்பாளையம் பகுதி செயலாளர் தமீம் அன்சாரி, நெல்லை பகுதி துணை செயலாளர் அலாவுதீன், மேலப்பாளையம் அப்துல், ஜெய்லானி, முஜாகித் அலி உள்ளிட்டோர் கலந்து கொண்டு கபசுரக் குடிநீரை விநியோகித்தனர். இந்நிகழ்வுக்கான ஏற்பாடுகளை பேட்டை நகர செயலாளர் இரா.முத்துக்குமார், பொருளாளர் அசன்கனி, MJTS நகர செயலாளர்கள் A1மைதீன், ஹபிபுல்லாஹ், காந்திநகர் ரவி, பேட்டை முருகேசன் உள்ளிட்டோர் ஏற்பாடு செய்திருந்தனர். கபசுரக்குடிநீரை 1000-த்திற்கும் மேற்பட்டோர் பருகி பயணடைந்தனர் என்பது குறிப்பிடதக்கது. தகவல்; #மஜக_தகவல்தொழில்நுட்பஅணி #MJKITWING #நெல்லை_மாவட்டம் 30-08-2020