கறம்பக்குடி:ஆக.31.,
மனிதநேய ஜனநாயக கட்சி புதுக்கோட்டை மேற்கு மாவட்டம் கறம்பக்குடியில் சிறப்பு நிர்வாகக்குழு கூட்டம் மாவட்ட செயலாளர் முஹம்மது ஜான், அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
மாவட்ட துணைச்செயலாளர் லெட்சுமணன் , மாவட்ட இளைஞரணி செயலாளர் அப்துல் காதர் ஆகியோர் முன்னிலை வகித்தனர், நகர செயலாளர் ஆசை அப்துல்லா, வரவேற்புரை நிகழ்த்தினார், ஒன்றிய செயலாளர் முஹம்மது அப்துல்லா, அறிமுக உரையாற்றினார் .
நகர இளைஞரணி செயலாளர் முஹம்மது மன்சூர், தீர்மானங்கள் முன்மொழிந்தார்.
இக்கூட்டத்தில்
கீழ்க்கண்ட தீர்மானங்கள்
நிறைவேற்றப்பட்டன.
1. எதிர்வரும் 02/09/2020 புதன்கிழமை கறம்பக்குடியில் மஜக மருத்துவ சேவை அணி சார்பில் கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி நடத்துவது.
2. கறம்பக்குடியில் விரைவில் நகர அலுவலகம் திறப்பது.
3, கட்சியின் வளர்ச்சிக்கு தீவிர களப்பணியாற்றுவது, மேற்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதில் மாவட்ட, ஒன்றிய, நகர, நிர்வாகிகள் பங்கேற்றனர்.
நிகழ்வின் இறுதியில் நகர பொருளாளர் ஜியாவுதீன், நன்றியுரை நிழ்த்தினார்.
தகவல் :
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKITWING
#கறம்பக்குடி_நகரம்
#புதுக்கோட்டை_மேற்கு_மாவட்டம்
30.08.2020