மஜக வேலூர் மாவட்டத்தில் 2ம் கட்டமாக கபசுர குடிநீர் விநியோகம்…!!


வேலூர்.ஆக.31.,

கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கை பணியில் தமிழகம் முழுவதும் மனிதநேய ஜனநாயக கட்சியினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

அதன் ஒரு நிகழ்வாக வேலூர் மாவட்ட மனிதநேய ஜனநாயக கட்சி-யின் சார்பில் 2 ஆம் கட்டமாக வேலூர் மாநகரின் R.N.பாளையம் கடைவீதியில் மருத்துவ அணி மாவட்ட துணை செயலாளர் அன்சர் அவர்களின் தலைமையில் கபசுரக் குடிநீர் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக மாவட்ட செயலாளர் முகமது யாசின் அவர்கள் கலந்து கொண்டு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்வில் மாவட்ட நிர்வாகிகள் ஜாகிர் உசேன், சையத் உசேன், ஷமீல், சாதிக், பயாஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

தகவல்
#மஜக_தகவல்_தொழில்_நுட்ப_அணி
#MJK_IT_WING
#வேலூர்_மாவட்டம்
31.08.2020